பக்கம்:வீர காவியம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம்

230


வாரியுனை அனைத்தெடுத்து மார்பிற் சேர்த்து மகிழ்கின்ற வாய்ப்பொன்றும் இல்லேன்: முத்த மாரியுனக் களித்துவக்கும் பேறும் இல்லேன்: மனந்து னிந்து செருமுனையில் உனது காலை வாரிவிட, இருவிழியும் மாரி கொட்ட, மண்மாரி பொழிகின்ற பேறு பெற்றேன்: பாரிலெனைப் போல ஒரு பேறு பெற்ற பாவியைநான் கண்டதில்லை ஐயோ! ஐயோ! 454 சொலற்கரிய வீரன்தான் எனக்கு மைந்தன் சூரன்தான் சிங்கந்தான் குறைவே யில்லை; வெலற்கரிய போர்முனையில் திறமை காட்டி வேருெருவன் மலையுங்கால் மாய்ந்தி ருப்பின் குலக்கொழுந்தை மறக்குருத்தை வாழ்த்தி நிற்பேன் கூறவொளு மகிழ்ச்சியினுல் சிரித்து நிற்பேன்: புலைக்குரிய என்செயலால் பழிக்க நின்றேன் பூமிஎலாம் எனக்கண்டு சிரிக்க நின்றேன்.' 455 முடித்தலையில் அடித்தவற்றைப் பிய்த்துக் கொண்டு முகத்தகத்தும் மார்பகத்தும் அறைந்து கொண்டே படித்தலத்தில் எனக்கினிமேல் வாழ்வெ தற்குப் பாலகனைப் பின்தொடர்வேன்' என்று கூறி, வடித்தெடுத்த கூர்வாளைக் கையிற் பற்றி மாவேழன் கடிதோச்சக் கண்ட மைந்தன் பிடித்திழுத்து விரவுன துயிர்வி டுப்பின் பிழைப்பனென எண்ணினையோ? பிழையேன் ஐய! 456 _-_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/233&oldid=911447" இலிருந்து மீள்விக்கப்பட்டது