பக்கம்:வீர காவியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரகாவியம்

38


வளங்கெழுமும் நாவலநாட் டாட்சி பெற்ற
      வாள்வேந்தன் பேரரசன் இவன்பேர் கேட்டால்
உளங்கலங்கி நடுநடுங்கி வியர்த்து வீரம்
      ஒடுங்கிநிற்பன்; ஆயினுமந் நாட்டுத் தென்றல்
இளங்காற்றுக் கிவன்தோற்றுச் சாய்ந்து விட்டான்;
      ஈதென்ன விந்தையடா! மெலிய ரேனும்
களங்கண்ட வீரரையும் வெல்வர் போலும்
      காரிகையார் கடைவிழியில் சிக்கி விட்டால்.57


தண்மதியும் பகையாகி, மலர்கள் நீவித்
      தாவிவரும் மென்காலும் பகையே யாகி
வண்மலரின் இதழ்பகையாய்ப் பஞ்சின் சேக்கை
      மலரணையும் பகையாகித் தன்னி ரண்டு
கண்ணிமையும் பகையாகிப் பொருந்தா தங்குக்
      கலங்கிஎழிற் கட்டின்மிசைப் புரள்வோன் நெஞ்சம்
புண்படுவ தாரறிவார்? ஆற்று தற்குப்
      போயொருசொல் மொழிவாரார்? தனிக்கி டந்தான்.58



மென்கால் - தென்றல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/41&oldid=911513" இலிருந்து மீள்விக்கப்பட்டது