பக்கம்:வீர காவியம்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 காட்சிப் படலம்


இயல் 17 காதல்தரும் ஓவியத்தின் எழிலேக் கண்டு கலங்கி.மனம் வெதும்பியவன் புலம்பி நின்ரு ன். வலைப்பட்ட அரியேறு போன்று காதல் வயப்பட்டுச் செயலற்றுத் துயிலு மின்றி அலைப்புண்டோன் நெஞ்சத்தில் தோன்றும் எண்ணம் ஆயிரமாய் ஆயிரமாய்ச் சுழலும் வேளை கலைப்பொலிவு நிறைந்தொளிரும் உருவக் கன்னி கட்டழகி ஒருத்தியவண் தோன்றக் கண்டான்; உலைக்குருகின் வெய்துயிர்ப்போன், முன்னுள் கண்ட உருவமது முறுவலித்து நிற்கக் கண்டான். 59 உருவினுக்கும் முறுவலுக்கும் கடைக்கண் காட்டும் ஒளியினுக்கும் மனமுடைந்தே ன் வியந்து சென்று மருவுதற்குக் கையிரண்டும் நீட்டி நின்ருன்; மயக்கத்தின் விளைவினுக்கு நாணி நின்ருன்; பெருமகற்குத் தோல்விதரும் உருவம் உண்மைப் பெண்ணன்று; வினவல்லான் கைவண் ணத்தால் வருமுருவம் எனவுணர்ந்து தளரும் வீரன் வாட்டமெலாந் திரண்டுருண்ட வடிவ மானுன். 60 உலைக் கருது கொல்லுலே க்துருக்தி. முறுவலித்து-புன்னகைசெய்து வினவல்லான்-ஒவியம் வல்லான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/42&oldid=911515" இருந்து மீள்விக்கப்பட்டது