பக்கம்:வீர காவியம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 42


வெவ்வலியன் இவ்வண்ணங் கனிந்தி ரங்கி வினவுதலும், தான்விழைந்து வந்த எண்ணம் செவ்வையுடன் எளிதில் நிறை வேறும் என்று சிந்தித்து விடைபகர்வாள், மூரல் ஊறுங் கொவ்வையிதழ் காணுங்கால், பெண்மை விஞ்சு கோதையர்க்கும் வாயூறும்; விழிகள் கண் டால் நவ்வியினம் வணங்கிவரும்; தோள்கள் காணின் நங்கையரும் மயங்கிடுவர் தமைம றந்தே! 65 நாடாளும் பலமன்னர் மணப்பான் வேண்டி நான் நீஎன் றடுத்தடுத்தெம் நாட்டில் வந்து கூடாரம் அடித்ததுதான் மிச்சம் அந்தோ! கூடாகி ஓடாகித் தம்மூர் மீண்டார்; கூடாது திருமணமே எனம றுத்துக் கோலமயில் இளவரசி கூறி விட்டாள்; சூடாத மலர்பூத்த பருவ மங்கை சூடுபெயர் வேல்விழியாம் ஐய! என்ருள். 66 நவ்வி - மான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/45&oldid=911521" இலிருந்து மீள்விக்கப்பட்டது