பக்கம்:வீர காவியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 64


'உனையடைய வேண்டுமெனும் நோக்கம் ஒன்றே உந்துவதால் என்னியல்பால் உரைத்து விட்டேன்; எனையடைய உனக்கிசைவு தந்தை தந்தால் எனக்கதன்மேல் பேறுண்டோ வெல்க' என்ருன்; மனையடையும் நேரம்மிக ஆயிற் றென்று மதிவந்து முகங்காட்டப் பிரிந்து செல்லத் தினையளவும் மனமிலராய் விலகிச் சென்ருர்; திருமணத்து நினைவுடனே துயிலச் சென்ருர். 117 நஞ்சுமிழும் முழுமதியை வானிற் கண்டார்; நலிவுதரும் தென்றலெனும் காற்றைக் கண்டார்; பஞ்சனையின் பெயராலே விரித்து வைத்த பாழ்நெருஞ்சிப் பரப்பினையே அங்குக் கண்டார்; விஞ்சுமணப் புகைபரவ, வெய்து யிர்த்து விடும்புகையாய் அதுபரவிச் சூழக் கண்டார்; வெஞ்சரமாய்ம் பூச்சரங்கள் தெரியக் கண்டார்; விழிகுவியாக் கனவுலகில் மிதந்து சென்ருர். 118 காட்சிப்படலம் முற்றும். சரம்-அம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/67&oldid=911569" இலிருந்து மீள்விக்கப்பட்டது