பக்கம்:வீர காவியம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரகாவியம் 84


இயல் 38 வயத்தரசன் வேண்டுமொரு வாய்மொ ழிக்கும் மாவேழன் மனமுவந்தே இசைவு தந்தான். புலர்காலைப் பொழுதத்தின் வரவு கண்டு பூரித்த வயத்தரசன் விரைந்து சென்று மலர்மாலை வயங்கிருதோள் வேழற் கண்டு மகளை மணங் கொள்கவென வேண்டி நின்ருன்; 'நலமாரும் என்புரவி தேடி வந்தேன் நான்தருவேன் நின்துணையை" என்று ரைத்தாய்! பலர்சூழ உரைத்தமொழி வாய்த்த தைய பாவையை என் துணையாகக் கொள்வேன்' என்ருன் 157 பெருவலியன் ஒருவனை என் மருக கைப் பெறுவதன்மேல் மகிழ்வுளதோ? ஆளுல் நீதான் சிறியஒரு வாக்குறுதி தருதல் வேண்டும்: சிறுபகை கொண்டிரண்டு நாடுந் தம்முள் பொருநிலையை எய்துமெனில் இவள்தான் இந்தப் பொன்குட்டை விட்டகலல் கூடா தென்ருன்: திருமகளை மருவுவதில் மயங்கி நிற்கும் திண்ணியனவ் வுறுதிமொழிக் கிசைவு தந்தான். 158 454ஆம் பாடலே நோக்குக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/87&oldid=911614" இலிருந்து மீள்விக்கப்பட்டது