பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 18.ஏ இடம் : லாகூரில் ஒரு சாலை. [பகத்சிங்கின் தாயார் வித்யாவதி தேவி தமது குடும்ப வக்கீலிடம் தன் மைந்தன் வழக்கைப் பற்றிப் பேசும் காட்சி) வித்யாவதி : என்னங்கய்யா. பதத்சிங் ஜெயில்லே உண்ணு விரதம் ஆரம்பிச்சு பல நாள் ஆயிட்டு தாமே. பாவம் உடம்பு எப்படி இருக்கோ. என்ன வேதனைப் படருனே. பார்க்கக்கூட அனுமதி யில்லேன்னு சொல்லிட்டாங்கய்யா. வக்கீல் : பயப்படாதீங்கம்மா. பகத்சிங் உயிருக்குப் பயமில்லே. ஜெயில் டாக்டர் சொன்னர் மேலும், இந்த உண்ணுவிரதத்தை பகத்சிங் ஆரம்பிக்கலே. ஜெயிலில் அரசியல் கைதிகளை உரிய மரியாதை யுடன் கடத்த வேண்டும் என்ற கோரிக்கை கிறை வேற, ஜதீந்திரகாத்தாஸ் உண்ணுவிரதத்தை ஆரம் பிச்சு இன்னிக்கு 50 நாள் ஆகுதம்மா. வித்யாவதி : ஐம்பது நாளாச்சாம்? அவன் உயிர்... வக்கில் : ஊசலாடும் உயிரோடு போராடிக்கொண்டே, அரசாங்கத்திடம் போராடுகிருனம்மா அ ந் த மாவீரன். ஜெயில் அதிகாரிகள் எவ்வளவோ பகீரதப் பிரயத்தனம் செய்து பார்த்து விட்டார்கள்! ஆனல் ஐதீன்தாஸ் உறுதி தளரவில்லை. மனம் மாறவில்லை. அரசாங்கக் கோரிக்கையை ஒப்புக்