பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 149 ராஜகுரு : சரி, உம்மை ஒன்னு கேக்கறேன். நீர் இத்தனை பேரை தூக்கிலே போடறதை சகிச்சிகிட்டு உயிர் வாழ்றிரே! எதுக்கய்யா? வாாடன் : வேறெ எதுக்கு குழந்தை குட்டியைப் பெத்துத் தொலைச்சுட்டேன். அதுகளைக் காப்பாத்த வேண்டாமா? அதுக்குத்தான், இந்த நரகத்திலே வேலை பார்க்கறேன். ஆமாம் தம்பி ராசாவூட்டு, புள்ளைங்க மாதிரி இருக்கற உங்களுக்கு ஏம்பா இந்தத் தலைவிதி? ராஜகுரு : தலைவிதி இல்லேய்யா. இது எங்கள் கடமை உமக்கிருக்கிற பத்துக் குழந்தைகளைக் காப்பாத்த உம் கடமையை நிறைவேற்ற நீர் இப்படி கரக வேதனைப்படறிர். நமது தாய்காட்டின் கோடானு கோடி ஏழைமக்கள் கல்வாழ்வு பெற, காங்கள் நரகத்துக்குப் போகலே அய்யா. வீர சொர்க்கத்துக் குப் போகிருேம். எங்களுக்குத் துரக்குக் கயிற் றையே வெற்றி மாலையாகப் போட்டு வழியனுப்புது பிரிட்டிஷ் அரசாங்கம். (உள்ளிருந்து விசில் சப்தம் கேட்கிறது) சரி நேரமாகிறது, ஜகத்சிங். கடைசியாக எங்களைப் பாச மொழிகள் கூறி ஆசையுடன் வழியனுப்பும் உமக்கு எங்கள் நன்றி. (ஒரு காகிதத்தைக் கொடுத்து) இந்தாரும், இந்தக் காகிதத்தைக் கொண்டுபோய், அதில் எழுதியுள்ள விலாசத்தில் கொடும், உம் வறுமை தீரும். உம்மை அங்கேயே வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். நல்ல சம்பளம் வரும், உமக்கு இன்றிலிருந்து, இந்த நரக லோகத்