பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 வீர சுதந்திரம் திலிருந்து நான் விடுதலை தருகிறேன். பாவம், நல்ல மனம் படைத்த மனிதர். குழந்தை குட்டிக்காரர். சந்தோஷமா வாழும். வார்டன் : தம்பி. சாகறபோது கூட உபகாரமா? அதுவும் உங்களைத் துாக்கிலே போடப்போற எனக்கா? ராஜகுரு : அழாதீங்கய்யா. பாவம்: நீரா எங்களைத் தூக்கில் போடுகிறீர்? நீங்கள் ஒரு கருவி. எம்மை அழிப்பது அங்கியர் ஏகாதிபத்தியம். சரி கேரமா கிறது. வார்டன் : உனக்கு எப்படியப்பா நன்றி செலுத்தப் போறேன்? ராஜகுரு : மனித நன்றிகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் அப்பாற்பட்ட நிலைமையை அடைந்து விட்டோம் நாங்கள். ஜகத்சிங், எப்போதாவது எங்களை நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள் அல்லவா? அப்போது உங்கள் குழந்தைகளிடம் காங்கள் வீரச் சிரிப்போடு நாட்டுக்காகத் தாக்குமேடை ஏறினுேம் என்று சொல்லுங்கள். அந்தக் குழந்தை பெரியவனுனதும் தன் குழந்தைக்கு எங்கள் கதையைச் சொல்லும். அத போதும் எங்களுக்கு, அது போதும். நீங்கள் எங்களுக்காகச் சிந்து பாட வேண்டாம், சிலை வைக்க வேண்டாம், கண்ணிர் சிந்த வேண்டாம், இந்த மண்னுக்காக மண்ணுகப் போகும் எங்களை எப்போ தாவது ஒரு சமயம் எண்ணிப் பார்த்தால் அதுவே போதும். அது போதுமய்யா எங்களுக்கு: