பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 155 பட்டாளம் வேட்டு வெடிமருந்து குண்டு போட்டு மடிந்திடும் மாந்தர்களின் பாவக் கனல் போக்கி பக்தியுடன் இந்தப் பாரதம் சாந்தியில் வாழ வந்தான். இராட்டையிலே நாட்டு மானத்தைக் காத்துகம் வீட்டையும் காத்திட ஓடிவந்தான் காட்டு விலங்குகள் மத்தியிலே ஒரு காருண்ய மாமுனியாக வந்தான். வான்மறை வள்ளுவன் வாய்மை விளக்கினை வாழ்க்கையில் காட்டிட வந்த மகான் ஆண்மையுடன் மாந்தர் அஞ்சாமல் வாழ்ந்திட ஆத்ம சக்திதனே தந்த மகான். தீட்டிய கத்தியால் ஆட்சி நடத்திய தியவர் கூட்டம் கடுங்கிடவே-ஒரு வேட்டியைக் கட்டிய வீரத்தளபதி வீதியில் புன்னகையோடு வந்தான். செங்கோலுக்கு முன்னெரு சங்கீதம் செல்லுமா என்ருன் ஆங்கிலேயன் சிங்க மறவர்கள் செல்வம் விடுதலை சீக்கிரமே அது தேவைஎன்ருன். பாட்டெழுதும் கவி பண்டிதரும் சூட்டு போட்ட வக்கீல் பட்டதாரிகளும் பூட்டை இறுக்கும் பணக்காரனும் இந்த காட்டை கினைத்திடச் செய்தமகான்' காட்சி முடிவு