பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 விர சுதந்திரம் குரல்-2 : எந்தப் படையெடுப்பாளனும் இந்த காட்டை முழுமையாக வெற்றி கொள்ள முடியவில்லை. வெற்றிகொள்ள முடியாது. குரல்-1 : இடைக்காலத்தில் செயலற்றுக் கிடந்த தாய கத்தில், கமக்குள்ளே இருந்த ஜாதி-சமய-மொழிபங்காளிப் பகைமைகளால்-பதவி வெறிப் பூசல் களால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் இந்த நாடு அடிமை இருட்டிலே சவவுறக்கம் எய்திக் கிடந்தது. குரல்-2 : அடிமைப் பேருறக்கத்தைத் துரத்தி, மக்களே மனிதர்களாக்கப் புதிய பூபாளம் பாடினர் மகாகவி பாரதியார்! தெய்வத் தமிழில் திருப்பள்ளியெழுச்சிப் பாடி, சுதந்திரப் போருக்கு காட்டை ஆயத்தப் படுத்தினர்! குரல்.1 . ஓராயிரம் ஆண்டு உறங்கிக் கிடந்த பின்னர் வாராது போல் வந்த மாமணியாம் சுதந்திரத்தைப் பெற்ருேம் நமது விடுதலைக்கு வெள்ளி விழாவும் கொண்டாடிவிட்டோம்! குரல்-2 : ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ல் குடியரன்த் திருநாளும் ஆகஸ்டு 15ல் சுதந்திர விழாவும் கொண்டாடுகிருேம்! கோட்டையிலே கொடி பறக்க விடுகிருேம்! பெரிய பெரிய பதவிகளை வகிக் கிருேம் பல பேறுகளை அனுபவிக்கிருேம்! குரல்.1 . இதற்கெல்லாம் காரணம், நமது பெரி யோர்கள் செய்த மகத்தான தியாகத்தால் நாம் பெற்ற விரசுதந்திரம்! -