பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விர சுதந்திரம் காடு மேடுகளில் சுற்றிய அந்த நாட்களிலேயே, அறிவுத் திறம் படைத்து, அரசியல் கெறி வகுத்து, பாராண்ட பரம்பரையின் வீரப் புதல்வர்கள் நாங்கள்! . விஞ்ச் : ஒல்டு ஸ்டோரி, பழைய கதை மேன், பழைய கதை! வ. உ. சி. : புதிய காவியம் தொடங்கிவிட்டது. அதன் முதல் அத்தியாயந்தான் சுதந்திர இயக்கம்! சுதேசி விரதம்! - - விஞ்ச் சட்டத்திலுள்ள எல்லாக் குத்தங்களையும் செஞ்சிப் போட்டிங்க. உங்களுக்காக ஜெயில் வெயிட் பண்ணுது மேன், ஜெயில் பயங்கரச் சிறை! * * ... வ. உ. சி. : சிறை என்ன சிறை வீரபாண்டிய கட்ட பொம்மனின் உயிரைப் பறித்த உன் துரக்கு மரத் துக்கே கூட நாங்கள் இனிப் பயப்படப் போவ திலலை. (கலெக்டர் கலங்கிப் பார்க்க) ஏன் கலங்குகிருய் வீரன் பெயர் கேட்டதும் வெள்ளே யுடல் நடுங்குகிறதா! - விஞ்ச்: என்ன உன்னலே அட்மினிஸ்ட்ரேஷனே கெட்டுப் போச்சு கோ பீஸ் மேன் நோ நிம்மதி!' நிம்மதியே இல்லே! வ. உ. சி. : இனி என்றுமே நீங்கள் நிம்மதியை எதிர் பார்க்க முடியாது. இந்தியாவின் விடுதலைப் போரில் நாங்கள் வெற்றி பெறுமவரை, எங்கள் சுதந்திரக் கோட்டையில் தாயின் மணிக்கொடி பட்டொளி