பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 37 வீசிப் பறக்கும் வரை, உமக்கும் கிம்மதி இல்லை, எமக்கும் ஒய்வில்லை, உலகுக்கும் அமைதி இல்லை. இதெல்லாம் உமக்குப் புரியப் போவதுமில்லை. விஞ்ச் : யூ வடிட் அப். நீங்க ரெண்டு பேரும் இந்த ஜில்லாவை விட்டே வெளியே போயிடனும், அது மட்டுமில்லே. பாலிடிக்ஸைப் பத்தி, அரசியலைப் பத்தி ஒரு வார்த்தைகூட மேடையிலே, ஜனங்க கிட்டே பேசமாட்டேன்னு ரைட்டிங்லே எழுதிக் கொடுக்கனும். வ. உ. சி. : என்ன? எழுதிக் கொடுக்க வேண்டுமா? மனிதனின் பேச்சுரிமைக்குத் தடையா? பகுத்தறி வற்ற இந்த காட்டு மிருகங்கள்கூட உனது கொடுங்கோவிலப்பற்றிக் கத்திப் பேசும். கர்ஜனை செய்யும். அப்படித்தான் கான் என்னய்யா பேசி விட்டேன். என் காட்டு மக்களை சுதேச பக்தி கொள்ளச் சொன்னேன். - - விஞ்ச் : சொன்னே மேன்1சொன்னே! விதேசிப்பொருளே வெறுக்கச் சொன்னே. வ. உ. சி. : ஆம். வியாதிக்கு மறக்தொன்று சொன் னேன். விஞ்ச் : ம் சொன்னே மேன் சொன்னே! சும்மா இருந்த ஜனங்களைத் தூண்டிவிட்டே! வ. உ. சி. : இல்லை. பயமென்னும் பள்ளத்தைத் தாண் டச் சொன்னேன். விஞ்ச் : அதிகாரத்ை த அவமானப்படுத்தினே.