பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வீர சுதந்திரம் (என்ற பாட்டு வாஞ்சியின் வீரவுள்ளத்தி எதிரொலி செய்கிறது. என்னவோ கனவுகள் கண்டு எழுந்து உட்காருகி முன். விடியும் நேரம். வேகமான தாளகதியில் பூபாளம் இராகம் இசைக்கட்டும்) வாஞ்சி : ஆ கனவு கடமையை மறந்து தூங்கி விட்டேன். (ஒரு பெட்டியைத் திறந்து ரிவால்வரை எடுக்கிருன். பொன்னம்மா குளித்து முடித்தபடியே அவ னருகில் வருகிருள். அவளுக்குத் தெரியாமல் ரிவால்வரை மறைக்கிருன்) பொன்னம்மா : ஏன்னு, உங்களைத்தானே. கொஞ்சங் கூடத் தாங்கவே இல்லையா? கண் என்ன இப்படி கெருப்புத் துண்டாட்டமா இருக்கு? வாஞ்சி : வெற்றி காண முடிவு செய்தபின் வீண் துரக்கத்துக்கு வேலையில்லே பொன்னு. விடிந்து விட்டது. நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் பொன்னு. பொன்னம்மா : என்ன முடிவு: வாஞ்சி : ஒ.அதுவா...வந்து... பொன்னம்மா : இனிமே என்னே விட்டுட்டு எங்குமே போறதில்லேன்னுதானே முடிவு பண்ணியிருக் கேள்: ஆமான்னுதான் ஒரு தடவை சொல்லுங் களேன். வாஞ்சி : ஆமா...ஆமா, ஆன ஒரு முக்கியமான வேலை. அது முடிஞ்சா, அப்புறம் நான் உன் கூடவே இருப் பேன், பிரியுவே மாட்டேன் பொன்னு: