பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வீர சுதந்திரம் making yourself rich in the ordinary mercantile Economist’s sense, is the art of keeping your neighbour poor’ அதாவது, காம் மட்டும் மேலும் மேலும் வியாபார ரீதியில் பணக்காரன் ஆகவேண்டும் என்று முயற் சிக்கும் கலை, நமது அண்டை வீட்டானே மேலும் மேலும் ஏழையாக்க காம் செய்யும் கலையாக முடிந்து விடும், என்று கூறுகிருர். - அடுத்து என் நினைவுக்கு வந்தது, ஆங்கிலப் பேராசான் சார்லஸ் டிக்கன்ஸ்: பிரஞ்சுப் புரட்சியின் பின்னணியில் தீட்டிய o ui&grs?uliersor Tale of Two cities இரு நகரங்களின் கதை' என்ற அமர காவி யத்தின் சில வரிகள் அவர் கூறுகிருர் : அது மிக மிகச் சிறந்த காலமாக இருந்தது. அதுவே மிகமிக மட்டமான கால மாகவும் இருந்தது. அது வெற்றி நிறைந்த சொர்க்கமாக இருந்தது. அதுவே தோல்வியின் கரகமாகவும் இருந்தது; ஆங்கே எல்லாம் நிறைந்திருந்தது! ஆங்கே எதுவுமே இல்லாத வறுமை நிலையும் இருந்தது அறிவுத் திறம் கிறைந்த காலமும் அதுதான். முட்டாள்களின் முழு ஆதிக்கம் கிறைந்த காலமும் அதுதான்! ஆயிரமாயிரம் அழகு மலர்கள் பூத்துக் குலுங்கும், இளவேனிற் பருவமும் அதுதான்! முதுமையின் நடுக்கம் கிறைந்த இலையுதிர் காலமும் அதுதான் அங்கே செல்வக் கொழிப்பு ஒருபுறம் வறுமையின் கொதிப்பு மறுபுறம்! பிரபுக்களின் கும்மாளம் ஒருபுறம்: பராரிகளின் பட்டினி ஒர்புறம்: அந்தக் காலம் ஏறக்குறைய இந்தக் காலத்தைப் போலவே இருந்தது' என்கிருர்,