பக்கம்:வெங்கலச் சிலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வெங்கலச்சிலை


குற்றமல்ல. 'சிந்திக்கும் சுதந்திரம் மனிதன் உயிரோடு பிணைக்கப்பட்டிருக்கின்றது.' என்றறியாத மக்கள் வேறு என்னதான் நினைக்க முடியும்.

மனக் கிளர்ச்சி இல்லாததால் குளிர்ச்சியடைந்திருந்த ரத்தத்தை சூடாக்கி தான் ஒரு ஜோதியானான். மக்கள் மன இருள் நீங்கியது. தான் ஓர் காந்தமானான், அதில் ஓடி ஒட்டிக்கொள்ளும் இரும்புத் துண்டுகளாயினர் மக்கள்.

"துன்பம். ஒன்று தான் ஆண்டவன் எமக்களிக்க மனமார ஒப்புக்கொண்ட பரிசு" என்று நம்பிய மக்களை, அரசன் ஆணையை மீறுவதென்பது அலைகடலை நீந்திக் கடப்பதைப் போலாகும், ஆகவே அந்த ஆபத்தான வேலையை செய்யக் கூடாது என்றிருந்த மக்களின் இருதயத்தை எஃகு ஆக்கினான். ஏன்? என்ற கேள்வியின் உலைக்கூடமாக்கினான். நானிலம் அதுவரை கண்டிராத நல்லதோர் திட்டத்தைத் தீட்டி மக்கள் மன்றத்தில் நீட்டினான். மறு பிறவியில் மாயா உலக மணி மண்டபத்தில் வீற்றிருக்கப் போவதாக நம்பிக் கைப் பொருளிழந்து கருத்தழிந்து வாழும் மக்களே! இப்பிறப்பில் எது காணப் பிறந்தீர்? எண்ணித் துணிக! என்ற வினா வெழுப்பினான். வைதீகத்தின் விலா நொருங்க வீராவேசத்தோடு தாக்கினான். மன்பதை வாழ வேண்டும், சுகமாக வாழ வேண்டும். கவலைக் குளத்தில் கண்ணீர்த் தேக்கத்தில் சிக்காமல் வாழ வேண்டும். சூது, பொய், பொறாமை, வாது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/10&oldid=1315735" இலிருந்து மீள்விக்கப்பட்டது