பக்கம்:வெங்கலச் சிலை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

வெங்கலச்சிலை


தத்தை கண்களில் கசியும் நீராலன்றி வாயால் சொல்ல வகையற்ற குழந்தைகள். பகைமை யறியாத பருவம். ஆட்டி வைக்கும் பொம்மைபோல் உடுத்தியதை அங்கீகரித்து, கொடுத்ததை யுண்டு, அபாயம் அறியாமல் விளையாடிக்கொண்டிருக்கும் சமத்துவச் சின்னங்கள்போல் விளங்கும் குழந்தைகள். ஆனால் ஒரு குழந்தையின் கையில் வெள்ளிக் கிண்ணமும், மற்றொன்றின் கையில் மட்கலையமும், ஒன்றன் உணவு நெய்ப் பண்டமும், மற்றொன்றின் உணவு நொய்க் கஞ்சியும், ஒன்றன் இருப்பிடம் செல்வ மாளிகையும், மற்றொன்றின் இருப்பிடம் மண் குடிசையும், ஒன்றுக்குப் பட்டாடையும், மற்றொன்றுக்குப் பஞ்சாடையே இல்லாமையும், ஒன்றைப் பாதுகாக்க வேட்டை நாய், மற்றொன்றின் உணவைப் பறிக்க வெறிநாய். இந்தக் கோலத்தோடு ஒரே தெருவில் எதிரெதிர் வீட்டில் வாழும் குழந்தைகள் நிலை. ஆனால் அந்த அவல நிலையை அவைகள் எண்ணிப் பார்க்க முடியாத பருவம். ஆயினும் அவைகளுக்கு இயற்கையாக ஏற்படும் அன்பால் அவைகளின் ஆகாரத்தைப் பரிமாறிக்கொண்டால் இரண்டு குழந்தைகளுக்கும் வாந்தி, ஏன்? நெய்யறியாத குழந்தைக்கு வாய் கொமுட்டல், நொய்யுண்ணா குழந்தைக்கு வாந்தி, இந்தக் கோலத்தோடு இரு குழந்தைகளும் வளருகின்றன. குழந்தைகளின் நிலையறிந்த பெற்றோர்கள், அவைகள் நட்புக்கொள்வது தகாதெனக் கண்டிக்கின்றனர். ஆனால் வெளியே சொல்ல இருதரத்தாருக்கும் அச்சம். பணக்காரனுக்கு இந்த நிகழ்ச்சியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/16&oldid=1315744" இலிருந்து மீள்விக்கப்பட்டது