பக்கம்:வெங்கலச் சிலை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

15


இதோ:—

ஒரே தெருவில் இரண்டு எதிர் எதிர் வீடுகள், வீடுகள் மட்டும் எதிர்த்தே நிற்கவில்லை. ஒன்றன் அழகும் மற்றொன்றின் அழிவும் நேருக்கு நேர் சூறாவளிப்பார்வை பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றில் ரேடியோ பாட்டும், மற்றொன்றில் பஞ்சப்பாட்டும், அழுதாலும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு வீட்டிலே பெருமை தரும் செல்வம், மற்றொரு வீட்டிலே வறுமையெனும், பயங்கரப் பள்ளம். ஒரு வீட்டின் செல்வக் குழந்தை நெய்யால் செய்த பாண்டங்களை வெள்ளிக் கோப்பையில் வைத்து ஒய்யாரமாக உண்கிறது. மற்றோர் வீட்டின் மண்மேனிக் குழந்தை மண்சட்டியில் நொய்க்கஞ்சி ஏந்தி வெளியே வருகின்றது. இருகுழந்தைகளும் தெருவில் உட்கார்ந்து உண்ண ஆரம்பிக்கின்றன. அந்த இருகுழந்தைகளின் பக்கத்திலும் இரு நாய்கள் நிற்கின்றன இருபெரும் குறிக்கோளோடு. குழந்தையை அணுகி அந்தத் தின் பண்டத்தோடு வெள்ளிப் கோப்பையும் யாராவது கொண்டு போகாமல் பாதுகாக்க அந்தப் பணக்காரன் வீட்டு நாய். இந்த ஏழைக் குழந்தை ஏமாறப் பார்த்துக் கஞ்சிக் கலையத்தை உருட்டிப் பசிதீர்த்துக் கொள்ளலாமா என்று சமயம் பார்த்துக்கொண்டு நிற்கிறது இந்தப் பராரி நாய்.

இரு குழந்தைகளும் வெள்ளையுள்ளம் படைத்தவர்கள். பொய், பொறாமை, கள்ளம், கபடம், வாது, வஞ்சனை அறியாதவைகள். தன் வருத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/15&oldid=1315743" இலிருந்து மீள்விக்கப்பட்டது