பக்கம்:வெங்கலச் சிலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

வெங்கலச்சிலை


வண்ணம் உள்ளன. ஆயினும் அதில் பிரயாணம் செய்வோர் வெகுவாக குறைந்துவிட்டனர்.

ஆள்வது யார் என்ற வினா வெழும்புகிறபோதே, யார் ஆண்டால் என்ன? என்ற நம்பிக்கையளித்த தலை விதி தரைமட்டமாகிறது. இவன் ஏன் உயர்ந்தவன் நாம் ஏன் தாழ்ந்தவர்கள்? என்ற கேள்வி எழும்பிய இடத்தில் தலைவிதியைக் காணோம். இவன் எப்படி முதலாளியானான், நாம் ஏன் தொழிலாளிகளானோம் என்ற சிந்தனை எழுந்த போதே தலைவிதி விடைபெற்றுக் கொண்டது. இது, மக்கள் தங்களை அறியாமலே செய்யும் விதிப்புரட்சி.

ஆனால் தன்னால் முயன்றதைப் பெற முடியாத போது, 'தலைவிதி' என்று ஆறுதலுக்காகச் சொல்லிக்கொள்கின்றனர். அந்த ஒரு நம்பிக்கை நிழலில் தான் மதப் பிண்டங்கள் வீற்றிருக்கின்றன. அவைகளின் காதுகள் செவிடுபட எழும்பிய கூக்குரல் அகில உலகினும் பரவா வண்ணம் தடைப்படுத்த பெரு முயற்சி சில நாட்கள் திரை மறைவாகவும், இப்போது பகிரங்கமாகவும் நடைபெறுகின்றன. அதைத் தடுக்க இதுவல்ல வழி, பசித்தால் உண்டு, வேர்த்தால் குளித்து, சலித்தால் உறங்கி, நினைத்தால் சொல்லி, உழைத்தால் வருவாய் ஆகியவைகள் அனைவர்க்கும் பொதுவாக்கப்பட்டால் யாரும் ஆத்திரங்கொள்ளக் காரணமிருக்காது. இந்த நிலை எப்போது தொடங்க வேண்டும்? தொடங்க வேண்டிய பருவமென்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/14&oldid=1315742" இலிருந்து மீள்விக்கப்பட்டது