பக்கம்:வெங்கலச் சிலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

13


கொண்டு நிகழ்காலத்தை நடத்தவும், நிகழ்கால நிகழ்ச்சிகளைக் கொண்டு எதிர்காலத் திட்டங்களை வகுக்கவும் உறுதுணை புரிவது சரித்திர வரலாறுகள். ஆகவே 'நடந்ததை மறப்போம்' என்ற வேதாந்தம் வேண்டுமானால் கொஞ்சம் மன ஆறுதலைத் தருமேயன்றி அடியோடு மறக்கக்கூடியதல்ல. ஆனால் கால வேறுபாட்டால் மக்கள் பண்பாடு மாறுகின்றது. அது நாகரிகத்தின் சாயல்.

"என் தந்தையின் ஈமக் கடனுக்காகச் செய்த அப்பங்களே, என் தாயின் மறுமணத்திற்கு உதவியது, என் தந்தையின் மரணத்தால் என் தாயின் கண்களில் உதிர்ந்த கண்ணீரின் அடையாளமாகத் தேங்கிய உப்புக் கோடுகள் மறையாமுன், என் தாயின் மறுமணத்திற்காக வாத்திய கோஷங்கள் முழங்கின. என்னே உலகம், என்னே அன்பு, என்று அழியாப் புகழ் ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பியர் ஓரிடத்தில் சித்தரிப்பதைப் போல, கால வேகத்தால் அன்பு குறைந்தும், நிறைந்தும் நிற்கின்றன. சுயநலம் வளர வளர அன்பு தானாகக் குறையும். சிறுத்தொண்டன் தன்னலத்தால் மோட்சம் விரும்பினான். அதற்காகத் தன் பிள்ளையையே கொல்லத் துணிந்தான். இது ஒரு கதை என்றாலும் இதைக் காட்டியது எதனால்? தன்னலத்தாருக்கு அன்பில்லை என்பதொன்றே இந்நிகழ்ச்சி காட்டுகிறது. தலைவிதி என்ற நம்பிக்கை நடைமுறையில் தளர்ந்துவிட்டது. அது தளராதிருக்க ஆங்காங்கு மத ஓடங்கள் மடமைக் கடலில் மிதந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/13&oldid=1315741" இலிருந்து மீள்விக்கப்பட்டது