பக்கம்:வெங்கலச் சிலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

வெங்கலச்சிலை


ஆனால், லெனின் சிலையைச் செய்த தொழிலாளி, தான் இட்ட ஒவ்வோர் உளிச் செதுக்கலையும், தன் உள்ளத்திலே பாய்ந்த ஈட்டியைப் போலவே கருதியிருப்பான். வாய் விட்டு அலறியுமிருப்பான்.

"பொது உடமைத் தந்தையே! புதுயுகங் கண்ட புரட்சி சிங்கமே! பொய்க் கணக்கெழுதிய பொல்லாத முதலாளி வர்க்கத்திற்கு எங்கள் மெய்க்கணக்கைக் காட்டி வாழ்வை மங்காத வளமாக்கிய வள்ளலே! வான், கடல், நிலம், நிலவு, உடுக்கைகள் உள்ளளவும் நினது புகழ் நீடூழி வாழட்டும்” என்று தன் கைத்திறன் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டிக் காட்டி, அந்த மேலோன் லெனின் சிலையை உருவகப்படுத்தி இருப்பான்.

அவன், அன்றிருந்த ஆணவக்காரர்களை சந்திக்கிழுக்க, அவர்களாலேயே ஏற்படுத்தப்பட்ட இராணுவத் தமுக்கில் கைவைத்து முழக்கஞ் செய்தான். அதன் எதிரொலிதான் கீழே தரப்பட்டிருக்கும் பாட்டாளிகளின் மே தின முழக்கமாகும்.

காலம்

இறந்த காலம் நிகழ்காலத்தின் தாய், எதிர் காலம் நிகழ் காலத்தின் சந்ததி, என்பதைப்போல் காலம் ஒன்றையொன்று மறந்துவிடா வண்ணம் பின்னிக்கொண்டிருக்கின்றது. தாயின் மக்கள், மக்களின் மக்கள் எப்படி மறந்துவிட முடியாதவர்களோ, அதேபோல் இறந்த கால எண்ணங்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/12&oldid=1315739" இலிருந்து மீள்விக்கப்பட்டது