பக்கம்:வெங்கலச் சிலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வெங்கலச்சிலை


ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் காரணமில்லை. மரணப் படுக்கையில் மக்களில் வித்தியாசமில்லை. இதை அறிந்தும் அறியாத மக்கள் சமுதாய வாழ்வில் விழுந்த பெரும் பள்ளத்தைத் தூர்க்க, எவ்வளவோ பெரிய பெரிய அதிமேதைகளான, தத்துவ, அரசியல் சீர்திருத்தச் சிந்தனை வெட்டியான்கள் முயன்றும் முடியவில்லை.

ஏதோ ஒரு இயற்கை நியதி, உலகச் சுழலின் சட்டத்தை எழுதியவண்ணமிருக்கின்றது. வறண்ட வாழ்வினர் நெஞ்சம் குமுறிக் கிளம்பிய நெருப்பு. விம்மிய பொருமலால் சிந்திய கடல் போன்ற கண்ணீர் அதை மாற்ற முடியவில்லை. இந்த நிலைமையைப் போக்க ஆங்காங்கு அறிஞர்கள் கூட்டங்களும், அவர்கள் மேற்கொண்ட வேலைகளுக்கு ஏற்றவாறு பட்டங்களும், அந்த அமைப்பே பிறகு ஒரு அரசாங்கமாக அமைந்து, அன்று முதல் மக்களுடைய காதுகளில், அடிமை, சுதந்திரம், விடுதலை, மூலதனம், கொள்ளை லாபம், புரட்சி, சிறைச்சாலை, தண்டனை, தூக்கு, தேர்தல், சர்வாதிகாரம், ஜனநாயகம், ஆகிய வார்த்தைகள் அடிபடவாரம்பித்தன. இவைகள் ஏன் ஏற்பட்டன என்று ஆராய்வதற்குப் பதில், அதிலிருந்து தப்புவதெப்படி என்ற வழியைத் தேடித்திரிய ஆரம்பித்தனர். அன்று தொடங்கி வேலியாக அமைக்கப்பட்ட சட்டங்கள், மக்கள் விலாவைக் குத்தும் வேலாக அமைந்தது. மக்கள் நல் வாழ்வுக்காக அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அந்த ஏற்பாட்டின் சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/18&oldid=1315749" இலிருந்து மீள்விக்கப்பட்டது