பக்கம்:வெங்கலச் சிலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

19


வினங்களை அரசாங்கமே தேடிக்கொள்ள வகையற்றுத் தனி மனிதன் தன் வாழ்க்கைக்காகத் தேடிய பொருளில் சிறிதளவு பங்கு கேட்க ஆரம்பித்தது. அந்த ஏற்பாட்டில் நல்லவைகளுக்குப் போக, தனக்குச் சம்பந்த மில்லாதவைகளுக்கும் பணம் கொடுக்க வேண்டுமென்று கட்டாயப் படுத்தப்பட்டான். அதில், குற்றஞ் செய்து தண்டனையடைந்த ஒரு சிறைக் கைதிக்கு உணவும், உடையும், குற்றஞ செய்யாத ஒருவன் கொடுக்க நேர்ந்தது. அரசாங்கத்தின் அதட்டலுக்குப் பணம் கொடுத்துத் தீரவேண்டிய நிலையில் நின்ற ஒருவன் தன் வருவாயைப் பெருக்க எண்ணினான். மேலும் மேலும் பெருக்கினான். மேலும் மேலும் அரசாங்கம் கேட்டது. சோர்வில்லாமல் கொடுத்தான், சொக்கியது அரசாங்கம் அப்பணக்காரன் இரும்புப் பெட்டியைப் பார்த்து கேட்டபோதெல்லாம் பணங் கொடுத்ததால் பணக்காரனைக் கண்டிக்க அரசாங்கம் பயந்தது. அரசாங்கம் நமது அடிமை என்ற நம்பிக்கையால், மனித எலும்பால் மைக்கூடு செய்து விற்றாலும் குற்றமாகாது என மனித வேட்டையாட முதலாளி வர்க்கம் தயங்கவில்லை. ஆனால் இருவரும் ஒன்றை மறந்து விட்டனர். பணக்காரனுக்கு இவ்வளவு பணமேது, தொழிலாளிகள் சிந்திய ரத்த வியர்வையல்லவா? என்று அரசாங்கமும் எண்ணவில்லை. அரசாங்கம் நம்மைக் கண்டிக்கா விட்டாலும் தொழிலாளிகள் கண்டித்தால் நம் நிலை என்ன? என்பதை பணக்காரர்களும், எண்ண மறந்து விட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/19&oldid=1315752" இலிருந்து மீள்விக்கப்பட்டது