பக்கம்:வெங்கலச் சிலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

வெங்கலச்சிலை


இந்த, மறதியின் நடுவே எழுந்தது 'தேவை' என்ற வார்த்தை. “எல்லார்க்கும் எல்லாம் தேவை," என்ற கோஷமெழுந்தது. இது முற்றி, 'புரட்சி' என்ற முடிவில் சற்றொப்ப 300 ஆண்டுகளாக இந்த வார்த்தை ஆங்காங்கு செயல் முறையில் தலை தூக்கியது. ஐரோப்பா கண்டத்தில் ஒருவாறு முடிவுகண்டு வெற்றி கொண்டாடிய கீதத்தின் ஒலிதான் கீழே தரப்பட்டிருக்கிறது.

“கீழே விழும் கல் சிந்திக்க முடியுமானால் அதற்குக் காரணம் தன் விருப்பந்தான் என்று கருதும், என்கிறார் ஸ்பினோசா. ஏனெனில் அது ஏன் கீழே விழுகிறது என்பது கல்லுக்குத் தெரியாது. நிலத்திற்கும் இழுக்கும் சக்தியிருக்கிறது. ஆகையால் நம்மை இழுத்து விடுகிறது என்று தெரிந்துகொள்ள முடியாத கல் வேறு என்ன தான் நினைக்கமுடியும். அதேபோன்று, மனிதன் கல் நினைப்பதைப் போல நினைக்கின்றான். அறிவு இந்த பிரமையை நீக்கும். எனவே, லோகாயுதவாதிகள், நாத்திகர்கள், சபஸயவாதிகள் முதலியோர் புதுமையைப் புகுத்தவும், வேதாந்திகள், மானசீகவாதிகள், ஆத்தீகர்கள் முதலியோர் பழமையை நிலைநாட்டவும் உக்ரகமாகப் போரிட்டு முன்னவர் கண்ட வெற்றியே மேதினமாகும்.

தொழிலாளி வர்க்கம் தனக்களிக்கப்பட்ட சோதனைச் சின்னங்களான, சிறைவாசம், சிந்திய ரத்தம், வழிந்தோடிய கண்ணீர், வாரால் அடிக்க எழும்பிய ரத்தவடுக்கள், தூக்குத்தண்டனை, நாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/20&oldid=1315754" இலிருந்து மீள்விக்கப்பட்டது