பக்கம்:வெங்கலச் சிலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

21


கடத்தல் ஆகிய சோதனைத் தீயில் தனது உள்ளத்தைப் புடம்போட்டு எடுத்த வெற்றியின் அறிகுறியே மேதின விழா.

"இயற்கையில் மனிதன் நல்லவன் என்று முடிவுகட்டிய தீவிர சிந்தனையாளர்கள் முடிவை அறிவுப்பூர்வமான கல்வியின் மூலம் மனிதனைக் கஷ்டங்களிலிருந்து விடுவித்துவிடமுடியும் என்று கருதிய கருத்தை கெப்ளர், கலிலியோ, நியூடன், டெக்கார்ட்டே போன்ற அறிஞர்கள் விஞ்ஞான ரீதியில் அடைந்த வெற்றியை ஆதாரமாகக்கொண்டு, அந்த ஆதாரங்களையே அடிப்படையாக வைத்து சமூக ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்ட ஜகம் வியக்கும் சிந்தனையாளர்கள் முகத்தில் ஓர்களை தோன்றிய நன்னாள் மேதினமாகும்.

"மன்னன் மதியற்ற ஆட்சியையும், கத்தோலிக்க குருமார்களின் கருணையற்ற செயலையும் சந்திக்கிழுத்து, சிந்திக்கும் சுதந்திரம் தங்கள் உணர்வோடு பிணைக்கப்பட்டிருந்த, வால்டேர், ரூசோ போன்றார் அரும்பாடுபட, அதே நேரத்தில் அறிவு வளர்ச்சிப் புரட்சியை யுண்டுபண்ணாது என ஏமாந்த எண்ணத்தை இறுகப் பிடித்துக்கொண்டு, ஆத்மீகத் துறையிலே தெய்வீகத் தத்துவத்தைப் புகுத்தும் படி. கூலிப் பண்டிதர்களை ஏவி, நம்பிக்கையை நங்கூரமாக அமைக்கும்படித் தூண்டி மக்கள் எண்ணத்தில் நச்சுகொள்கையை நாட்டத் தீட்டிய திட்டமும் ஒன்றுக்கொன்று ஈவிரக்கமில்லாமல் தாக்கித் தனி சொத்துரிமையை அழித்துப், பொது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/21&oldid=1315755" இலிருந்து மீள்விக்கப்பட்டது