பக்கம்:வெங்கலச் சிலை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வெங்கலச்சிலை


உடமையைப் பூக்கச் செய்து அறிவியல் சகாப்தத்தை அகிலத்திற்கெடுத்தோதிய நாள் மேதினமாகும்.

"பாட்டாளிகளின் படை திரண்டுவர, மேட்டுக் குடிகளும், மேனா மினுக்கிகளும், நாட்டாண்மைக்காரரும், பாட்டாளிகளின் பகைவர்களும், ஓடியொளிந்தாலன்றி உயிர் வாழ முடியாது, என்று அலறிக் கண்டபக்கமெல்லாம் ஓடி, காலால் உதைபட்டு, கைகளால் அறை வாங்கி எப்பக்கமும் ஓடினும் காப்பாற்றுவாரற்று, கவலையோடு சாயும் தலைக்குத் தன் கைகளை முட்டுக் கொடுத்து மூலையில் உட்கார வைத்த நாள் மே தினமாகும்.

மனிதன் மானசீகத்தின் அடிமையல்ல, அவன் இயற்கையின் ஒரு பகுதி என்ற வாதத்தை மேற்கொண்டு உடல் தான் முந்தியது என்ற உலகாயுதவாதிகளுக்கும், மனிதன் மனத்தால் நடத்தப்படுகின்றான், அதற்கு எவனும் அடிமைப்பட்டே தீர வேண்டும் என்றும், ஆகவே மனந்தான் முந்தியது என்ற மானசீகவாதிகளுக்கும் இடையே நடந்த போராட்டத்திற்கோர் நல்ல முடிவைக் காட்டிய நாள் மேதினமாகும்.

புரட்சியை யுண்டுபண்ணும் சமூக வளர்ச்சிக்காகப் பாடுபட நினைத்த தத்துவ ஞானிகளின் உன்னத நோக்கத்தால், எந்த பிரஞ்சு தேசபக்தர்களை ஏவிப் பழய ஆட்சி முறையை அழித்தார்களோ, அதே தத்துவ ஞானிகள் வெறும் தத்துவம் என்ற சங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/22&oldid=1315757" இலிருந்து மீள்விக்கப்பட்டது