பக்கம்:வெங்கலச் சிலை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

23


நாதம் ஒன்றினாலேயே எல்லாக் காலங்களிலும் புரட்சியை யுண்டுபண்ண முடியும் என்றும், அதற்காக அடிமைத் தளையை அறுத்தெரியப் பலாத்காரத்தை உபயோகிக்கக்கூடாதென்றும், போரில் ஈடுபட்ட அவர்கள் எண்ணத்திற்கெதிராக ஆயுதந்தாங்கிப் புரட்சிக்கொடியை யுயர்த்திப் பல்லாயிரம் பசித்த வாய்களை மூடிய பகுத்தறிவுள்ளோருக்குத் தொழில் உலகம் தலைவணங்கி நன்றியை செலுத்தும் நாள் மேதினமாகும்.

ஒரு சில முதலாளிகள் சுரண்டல் கொள்கைக்கு இரையாகி ஒடுக்கப்பட்டுப், பசி, பிணி, பஞ்சம், நோய், கவலை வறுமை சிறுமை, வேலையில்லா திண்டாட்டம் இன்னோரன்ன கொடிய பீரங்கிகளின் எறிவாயிலிருந்து துன்புறும் பாட்டாளி பட்டாளம், தனது அகில உலக ஐக்கியத்தின் ஏகக் குரலை எழுப்புவதற்கும், பொன்னான உழைப்பிலிருந்து பொன் திரட்டும் பொல்லாத முதலாளிகளை முறியடிக்கவும், இன்றைய ஒழுங்கீனமான சமூக கோபுரத்தைத் தகர்த்தெறிந்து புதிய, அசைக்க முடியாத கோட்டையை எழுப்ப ஒரு சண்டமாருத, சமூகப் பொருளாதாரப் புரட்சியை உண்டாக்குவதற்கும் கோடானு கோடி பாட்டாளிகள் கைகோத்து நிற்கும் நாள் மேதினமாகும்.

அகில உலகத் தொழிலாளர் தலைவரும் பொது உடமைத் தந்தையும் மானிட வர்க்கத்தின் மன சாட்சியுமான காரல் மார்க்ஸ், என்ஜில்ஸ் வழிவந்த சோவியத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/23&oldid=1315758" இலிருந்து மீள்விக்கப்பட்டது