பக்கம்:வெங்கலச் சிலை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

வெங்கலச்சிலை


நவயுக சிற்பிகளான லெனின், ஸ்டாலின் ஆகிய மனிதகுல மாணிக்கங்களை வாழ்த்த உலகெங்கும் வாழ்கின்ற உழைப்பாளித் தோழர்கள் ஒன்றுபடும் நாள் இந்த மேத் திருநாள்.

உழைப்பாளிகளின் உரிமைக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்த அறவோர்கள், பாட்டாளிகளின் விமோசனப் பீடமாகிய தூக்கு மேடையில் துஞ்சிய தூய நெஞ்சினர், வெஞ்சிறையைத் தம் வீட்டாக மதித்து வாடிவதங்கிய பாட்டாளிகளின் தலைவர்கள், அந்தமானில் அஞ்ஞாத வாசம், சைபீரியாவில் வனவாசம், பெர்லினில் பாதாளச் சிறை, ரோமில் நரகவாசம், சீனாவில் சிரச்சேதம். சிகாகோவில் சித்ரவதை போன்ற எழுதவும் எண்ணவும் நடுங்கும் வண்ணம் இம்சிக்கப்பட்ட தலைவர்களுடைய எண்ணற்கரிய தியாகத்திற்குத் தலைவணங்கும் நாள் இந்த மேதினம்.

பாட்டாளித் தலைவர்களின் தியாகம் தீரம் வீரம் உழைப்பாளிகளின் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து உறுதியையூட்டும். உதிரத்தில் உணர்ச்சியையூக்கும். நரம்பிற்கு இரும்பினையொத்த வலிமையை நல்கும். மே தின எழுச்சியால் அவர்கள் அசைக்க முடியாத ஒற்றுமையும், சிதைக்க முடியாத பலமும் எதிர்காலக் கண்ணாடியில் நிலை பெற்ற நம்பிக்கையை யூட்டியது.

முதலாவது உலகப்போர் என்னும் பயங்கரமான இடியினால் பெரும் பெரும் ஏகாதிபத்தியங்கள் சரிந்து விழுந்தபோது ரஷ்யாவில் உழைப்பாளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/24&oldid=1315759" இலிருந்து மீள்விக்கப்பட்டது