பக்கம்:வெங்கலச் சிலை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

25


கள் தங்கள் ஒப்பற்ற ஆட்சியை நிலை நாட்டினார்கன் உறுதியான பாறையின் மீது இரண்டாவது உலகப்போர் எனும் மாபெரும் மனித பூகம்பம் எழுந்தது. பிரெஞ்சு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களும், இதாலி ஜேர்மனி போன்ற பாசிஸ்ட் நாடுகளும் உலுக்கப்பட்டு, அவற்றின் அடிப்படைகள் நிலைகுலைந்து மேற்கோப்புகள் அனைத்தும் முறிந்து சரிந்த வண்ணம் உள்ளன. உலகம் என்றும் கண்டிராத கொடிய ஆயுதங்களையும், கோடானு கோடி படைகளையும் கொண்ட மனித சமூகத்தின் சத்துருக்களான பாசிஸ்டு வெரியர்களின் எண்ணத்தில் மண்ணடித்துப் பாசிஸ்டு பாதகர்களைப் சுட்டுப் பொசுக்கி தூவென்று தூவி சோவியத் சிங்காதன மேறியது. அப்பால் யுகோவிலும் ஜெகோவிலும் சோவியத் மலர ஆரம்பித்தது. விரைவில் ருமேனியா, பல்கேரியா, போலண்டு, ஹங்கேரி, அபிசீனியா, ஜர்மன், இதாலி, கிரீஸ் ஆகிய நாடுகளில் சோவியத் ஆட்சி மலரும் என்பதற்கான அறிகுறிகள் மலிந்து வரகின்றன. சீனாவில் முழுதும் செங்கோடிடப்பட்டிருக்கிறது. இதைக் கண்டு முதலாளித்வக் கடைசி கோட்டையான அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்திய தலைவன் எந்த நேரத்திலும் யுத்தப் பிரகடனத்தில் கையெழுத்திடலாம் என்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது. மரணப் படுக்கையில் வலிவற்று வீழ்ந்து கிடக்கும் பிரிட்டீஷ் பிரென்சு ஏகாதிபத்தியங்கள் தங்கள் தலையை ஆட்டுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/25&oldid=1315761" இலிருந்து மீள்விக்கப்பட்டது