பக்கம்:வெங்கலச் சிலை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

வெங்கலச்சிலை


வறுமையையே பெருமையாக நினைத்து, வடி கட்டிய ஹெகலின் மானசீகவாதத்திற் கடிமைப்பட்டு செயலற்றுக் கிடந்த கோடிக் கணக்கான பாட்டாளிகளைத் தனது உலகாயுத வாதத்தால் விலைமதிக்க முடியாத வர்க்கமாக்கி, முடியாட்சியைத் தள்ளி, குடியாட்சியை ஓங்க வைக்கவும், 8 மணி நேர வேலை, 8 மணி நேரக் களியாட்டம், 8 மணி நேர ஓய்வு என ஒரு நாளை மூன்று கூறாக்கி மக்கள் மனதைக் களிக்கச் செய்த மாபெருந் தலைவர்களின் சிந்தனைக்கும் சேவைக்கும் தலை வணங்க உலக பாட்டாளிகள் ஒன்று படும் நாள் மேதினமாகும்.

தனி உடமை மாறினால். மதம், கலை, ஒழுக்கம் முதலியன அழிந்துவரும் என்று ஓலமிட்ட முதலாளிகளை அதட்டி நிறுத்தி, எந்த மதத்தை? எந்தக் கலையை? எந்த ஒழுக்கத்தைப் புதிய சமூகம் அழிக்கும். மனிதனுக்கு அபினியாக விளங்கும் மதத்தையா உழைக்காமல் ஓய்வு பெறும் இனத்தின் கலையையா, கலையின் பெயரால் இழைக்கப்படும் அநீதியையா? ஆம், என்றால் "ஒழியட்டும் அவ்வளவும்" என்று ஓங்காரமிட்டத் தொழில் உலகம் தோள் தட்டி நின்ற நாள் இந்த மேதினமாகும்.

ஆயுத பலத்துடன் குடியரசைப் பிரகடனப்படுத்த முடிவு செய்த ராஸ்பெல் இரண்டு மணி நேரத்தில் ஜனங்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யாவிடில் இரண்டு லட்சம் பேர்களுடன் தான் திரும்பி வர நேருமென்ற எச்சரிக்கையை அரசாங்கத்துக்கு விடுத்தவுடன், அந்தக்கால வரையறைக்குச் சற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/26&oldid=1315762" இலிருந்து மீள்விக்கப்பட்டது