பக்கம்:வெங்கலச் சிலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

27


முந்தியே, அதாவது: புரட்சியில் உயிர் நீத்தவர்களின் உடலங்கள் விறைத்துப் போகா முன்னம், தொழிலாளிகள் நிராயுத பாணிகளாகா முன்னம் குடி, அரசு வாழ்க! சமத்துவம் சகோதரத்துவம் சுதந்திரம் வாழ்க! என்ற பேரொலி பாரிஸ் முழுதும் முழக்கின நாள் மேதினமாகும்.

"சட்ட ரீதியான முடியாட்சி தான் சர்க்காரின் பரிபூரண வடிவம்," என்ற சுலோகத்தை 1840-ம் ஆண்டு ஜர்மன் முதலாளிகளின் அரசியல் இயக்கத்துக்கு முதுகெலும்பு போல் இருக்கச் செய்த ஹெகலின் இந்த இற்றுப்போன வாதத்தையும், அதற்கு அருந்துணை புரிந்த நான்காவது பிரடிரிக் வில்லியம் செய்த விவேகமற்ற செய்கையையும் வீணாக்கிய உழைப்பாளிகள், "உழைப்பவனுக்கே உலகம்", என்ற உறுதியை ஊர் அறியச் செய்த நாள் மேதினமாகும்.

பசிக்காவிட்டாலும் புசிக்கின்றான் முதலாளி, கிடைத்தால் தான் புசிக்கின்றான் தொழிலாளி, என்ற உதவாக்கரை நியதியை மாற்றித் தேவைக்காகப் பல தேச மக்கள் செய்த புரட்சியின் கல்நாட்டு விழா இந்த மேதினமாகும்.

வேலை நேரத்திற்கும் ஓய்வு நேரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் உழைத்த பாட்டாளிகளும், வேலையே இன்னதென்று தெரியாமல் அல்லும் பகலும் ஓய்வாக மஞ்சத்தில் சாய்ந்து கொண்டு, கூலி உயர்வுக்காக வெளியே கூடியிருந்த மக்களை விரட்டத் தன் வேட்டை நாய்களை ஏவிய முதலாளியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/27&oldid=1315764" இலிருந்து மீள்விக்கப்பட்டது