பக்கம்:வெங்கலச் சிலை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

வெங்கலச்சிலை


கடும் போரிட்டுக் கண்ட வெற்றியால் தொழிலாளர்கள் களிப்புக் கடலில் மகிழ்ந்த நாள் மேதினமாகும்.

ஐரோப்பா வெங்கும் ஏற்பட்ட யந்திரப் புரட்சிக்குப் பின், ஓய்வெடுக்கும் யந்திரத்தைக் கண்டு, ஓய்வுபெற முடியாமல் சட்டத்தால் தடுக்கப்பட்ட தொழிலாளிகள், அந்தச் சண்டாளத்தனத்தைப் போக்க மனிதப் புரட்சி நடத்தி, சரிநிகர் சமானம் என்ற பீடத்தின் மேல் சமுதாய உரிமைப்போர் சாசனத்தில் கையொப்பமிட அனைவரும் கூடிய அகிலம் வியக்கும் நாள் மேதினமாகும்.

பாரீஸ் நகரை ஜெர்மனிக்கு விற்று, தொழிலாளர்களை நசுக்கி பிஸ்மாா்க்கிடம் சரணாகதியடைந்த முதலாளிகளுக்கு, அபயம் அளிப்பதாக ஆயுதம் ஏந்தி வந்த பிஸ்மார்க், பாரீஸ் மக்களின் மன உறுதியையும் தளராத ஊக்கத்தையும் கண்டு குலைநடுங்கி, அந்தத் திசை நோக்கித் தண்டனிடச் செய்த நன்னாள் மேதினமாகும்.

வலிவுடையோர் பலமற்றுவிழ பல வன்னெஞ்சர்கள் செய்த சூழ்ச்சியால் ஆங்காங்கு வெட்டப்பட்டிருந்த மரணப் படுகுழியைத் தாண்டி, உயிரைத் திரணமாக மதித்து இரும்பையும் கல்லையும் தன் நரம்பின் வன்மையால் நசிக்கிய மக்கள் நல்ல நாளெனக் கொண்டாடிய நாள் இந்த மேதினமாகும்.

உடலுக்கும் உயிருக்கும் உணவுக்கும் ஊதியத்திற்கும் சரியான தத்துவம் தெரிந்து கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/28&oldid=1315765" இலிருந்து மீள்விக்கப்பட்டது