பக்கம்:வெங்கலச் சிலை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

29


முடியாமல் திரைபோட்டு மறைத்து அவர்கள் உடலில் பிழிந்தெடுத்த ரத்த வண்ணத்தால் மாளிகையை அழகுபடுத்தி உல்லாசபுரியில் வாழ்ந்த உலுத்தர்கள் ஊர்ப்பயணம் சொல்லிக் கொள்ளும் நாள் மேதினமாகும்.

ஏகாதிபத்தியங்கள் இடிந்துவிழ, சாமராச்சியங்கள் சரிய, சர்வாதிகாரங்கள் சாக, எதேச்சாதிகாரங்கள் எப்பக்கமும் தலைகாட்டாதொழிய, மூர்க்கத்தனம் முறிந்துவிழ, அடக்குமுறை தர்பார் அஸ்தமிக்க, தடியடித் தாண்டவத்தைக் குழிதோண்டிப் புதைக்க, ராணுவ தர்பார் அந்திப் பொழுதாக, அனைத்துலக தொழில் வளம் செழிக்க, தொழிலாளர்கள் மகிழ்ச்சியால் கொப்பளித்த சிந்தனைப் பொறிகள் கனல் கக்க, கந்தையுடுத்தியவனைக் கர்மவீரனாக்கிய நாள் மேதினமாகும்.

தொழிலாளிகள், தங்கள் மேல் எழுதப்பட்ட பொய்க் கணக்கை பொய்யாக்க, ஓடும் ரயிலையும், பறக்கும் விமானத்தையும். மிதக்கும் கப்பலையும், வானமளாவிய மாளிகைகளையும், கதிர் குலுங்கும் நஞ்சை நிலத்தையும், பழங்குலுங்கும் சோலையையும், ஆழமிதக்கும் எண்ணெயையும், அந்த நிலையிலேயே இருக்கும் பொன்னையும், ஆழ் கடலில் ஒளிந்திருக்கும் முத்தையும் காட்டி, இவைகள் எங்கள் மெய்க் கணக்கைக் காட்டுமே எனக் கடைசி கணக்கை சரிபார்த்த நாள் இந்த மேதினமாகும்.

கோலோன் மக்கள் அடைந்த கொடிய தண்டனை, உடைத்தெறியப்பட்ட பாஸ்டில் சிறை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/29&oldid=1315766" இலிருந்து மீள்விக்கப்பட்டது