பக்கம்:வெங்கலச் சிலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வெங்கலச்சிலை


முற்றுகையிடப்பட்ட பாரீஸ் கோட்டை, சிரச்சேதம் செய்யப்பட்ட சேர்லெஸ், முறியடிக்கப்பட்ட பிரடரிக்வில்லியம், கிழித்தெறியப்பட்ட ஹெகலிசம், புகை கிளம்பாத தொழிற்சாலைகளின் புகை போக்கிகள், துள்ளி விழுந்த தொழிலாளர்களின் உடலங்கள், கசையால் அடித்த கல் நெஞ்சர்கள் சரணாகதி, மன்னர்கள் மாளிகை முன் ஒட்டிய சுவரொட்டிகள், கையிலேந்திய கருப்புக்கொடி, சண்டமாருத மேடைப் பேச்சு, அதைக் கலைக்க அரசர்கள் ஆணையைப் பெற்று அடக்கு முறை சாசனத்தைக் கையிலேந்தி அணி வகுத்து வந்த ராணுவப்படை, தடையுத்தரவு, தடியடி ஆகிய அவ்வளவையும் நினைவுக்குக் கொண்டுவரும் நாள் மே தினமாகும்.

நீராவி புரட்சியை ஒப்புக்கொண்டு, அதன் துணையால் ஏற்பட்ட யந்திரப் புரட்சியை வரவேற்று, அந்த யந்திர இயக்கத்தைத் துரிதப்படுத்திய மின்சாரப் புரட்சியைக் கைலாகு கொடுத்து வரவேற்று, அதனால் உங்கள் உற்பத்தியை அதிகப்படுத்தி, கொள்ளை லாபம், அடிக்கும் நீங்கள், உற்பத்தி பெருக்கம், யந்திர துரிதம், கொள்ளை லாபம், ஆகவே எங்கள் கூலிப் புரட்சியை ஒப்புக்கொண்டு ஏன் கூலியை உயர்த்தக்கூடாது? என ஏகமனதாக முதலாளிகளைத் தட்டிக் கேட்கும் நாள் இந்த மேதினமாகும்.

அடிமை சகாப்தத்திலிருந்து அறிவியக்க சகாப்தத்துக்கிழுத்துச் சென்ற அறிவியக்கக் கர்த்தாக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/30&oldid=1315767" இலிருந்து மீள்விக்கப்பட்டது