சி. பி. சிற்றரசு
31
களின் பெயர்களை அகிலத்திற்கு நினைவுப்படுத்தக் கூடிய பல்லாயிர மக்களை, அதே தொழிலாளிகள் செய்த ஆயுதங்களை உபயோகித்த கொடுமைக்கு விடை கொடுத்த நாள் இந்த மேதினமாகும்.
இந்த மே தின முழக்கத்தை ஐரோப்பாவில் தொழில் உலகம் செய்த வெற்றி விழாவெனக் கொண்டாடுகிறோம். ஆண்டின் ஐந்தாவது திங்கள் அங்கு பஞ்சத்தைப் போக்கி ஓரளவுக்குத் தொழிலாளிகள் தங்கள் உரிமையைப் பெற்று உன்னத நிலையடைந்திருக்கின்றார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சியை மனதில் வைத்துக்கொண்டு இங்கும் புரட்சியை அதே வடிவில் செய்யலாம் என்று தொழிலாளர்கள் நினைக்கும் போது தான் அவர்கள் புரட்சி வெற்றிபெறாமல எதிர்ப்புரட்சி நடக்க ஆரம்பிக்கிறது.
புரட்சி, (Revolution) எதிர்ப்புரட்சி, (Counter Revolution) என்றால் என்ன என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவோம்.
- 1. நல்ல ஆடை உடுத்திக் கொண்டிருக்கிறான்.
(முதலாளி)
- 2. கிழிந்த ஆடை உடுத்திக் கொண்டிருக்கிறான்.
(தொழிலாளி)
- 3. ஆடையே இல்லாமல் நிற்கிறான்.
(படித்துவிட்டு வேலையில்லாதவன்)
நல்ல ஆடை அணிந்திருக்கும் முதலாளியைப் பார்த்து எனக்கு மாத்திரம் ஏன் கிழிந்த ஆடை எனக் கேட்கிறான் தொழிலாளி.