பக்கம்:வெங்கலச் சிலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

வெங்கலச்சிலை


எனக்கு அந்த கிழிந்த ஆடையே இல்லையே நீ கந்தல் ஆடையாகிலும் அணிந்து கொண்டிருக்கின்றாயே, நீ அந்த கந்தலைக் களைந்தெறிகிறபோது நான் அதை எடுத்து உடுத்திக் கொள்வேன் என்கிறான் படித்துவிட்டு வேலையில்லாதவன். அதேபோல் ஆத்திரத்தால், தொழிலாளி தன் கிழிந்த ஆடையைக் களைந்துவிட்டு, முதலாளியின் நல்லாடையைப் பறிக்கத் தாவும்போது, பக்கத்தில் நிற்கும் வேலையற்றவன், அந்தத் தொழிலாளி களைந்தெறிந்த கந்தல் ஆடையை எடுத்துங்கொள்கிறான். அதே நேரத்தில் முதலாளியின் நல்லாடையைக் தாவிப்பிடிக்க முடியாமல், சட்டத்தால் தடுக்கப்படுகிறான். இந்த நிலையில் இருந்த கந்தல் ஆடையையும் பறிகொடுத்து விட்டு, நல்லாடையையும் அடைய முடியாமல் இடையில் நிர்வானமாய் நின்று விடுகிறான் தொழிலாளி. இது இன்றைய நமது நாட்டின் நிலை.

படித்துப் பட்டம் பெற்றோர் ஏராளம். தொழில் வளம் மிகமிகச் சொற்பம். உற்பத்திப் பெருக்கம் உற்பத்திப் பெருக்கம் என்று ஓயாமல் கத்துகிறது சர்க்கார். எங்கே போய், யாருடைய நிலத்தில் எதை, எந்த உரிமையின்பேரால் உற்பத்தி செய்வதோ தெரியவில்லை.

படித்தவன் ஏன் பட்டிக்காட்டுக்குப் போய் பயிர் செய்யக்கூடாது, என்று பல இடங்களிலே பல படங்களிலே பேசப்படுகிறது. இது எவ்வளவு முட்டாள்தனமான வாதம் என்பதை நாம் யோசிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/32&oldid=1315771" இலிருந்து மீள்விக்கப்பட்டது