பக்கம்:வெங்கலச் சிலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

33


வேண்டும். அதனால் பட்டிக்காட்டுக்குப் போவதோ, பயிர் செய்வதோ நாம் கேவலமென்று கருதவில்லை. ஆனால் பயிர் செய்வதற்காக, B. A., M A., பட்டம் பெற பணத்தைப் பாழாக்கிப் படித்தது அதற்குத்தானா என்பதுதான் நமது கேள்வி.

ஏன் படித்தவன் பயிர் செய்யக்கூடாதென்ற வாதமும், ஏன் யானையை வண்டியில் கட்டி இழுக்கச் செய்யக்கூடாதென்ற வாதமும் முட்டாள் தனத்திற்கு முதல் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

சமூக அமைப்பின் பேரால் தொழில்களைப் பங்கிட்டுக் கொடுத்திருக்கும் இந்த நாட்டில், தண்ணீரில் தர்ப்பணம் விடவேண்டிய வகுப்பில் பிறந்தவர்களெல்லாம், தண்டவாளத்தில் ரயிலை விட வேண்டிய பொறுப்பில் அமர்ந்திருக்கின்றார்கள். இது எப்படி மாறியதோ நமக்குத் தெரியாது. ஆனால் நாடு 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையில் இல்லை. என்றாவது ஓர் நாள் எரிமலை வெடிக்க வேண்டிய நிலை போன்ற நிகழ்ச்சி நடந்தாலும் யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள்.

இன்றைய நிலையில் மக்கள் அன்றாட நிகழ்ச்சிகளையும் அரசியலையும் அணுவணுவாகத் துருவிப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர் ஆகவே பொது மக்கள் எதிலேயும் ஆவேச உணர்ச்சி கொண்டு குதிக்கும் நிலையிலில்லை. திடீரென இந்த நிலை ஏற்பட்டதற்குக் காரணமென்ன? போருக்குமுன் மக்களின் சராசரிப் பொருளாதாரத் துறையிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/33&oldid=1315772" இலிருந்து மீள்விக்கப்பட்டது