பக்கம்:வெங்கலச் சிலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

வெங்கலச்சிலை


வாழ்க்கைத் துறையிலும் அவ்வளவாக கேடு சூழாமலிருந்ததால், யாராண்டால் என்ன? என்ற நிலையில் மக்கள் ஆட்சியைப் பொறுத்தவரையிலும் அதிகமாகக் கவனிக்காமல் வந்தார்கள். இருக்கும் வசதியைவிட இன்னும் சற்று அதிகமாகப் பெற்று வாழலாம் என்ற குறிக்கோளோடுதான் அன்னியனை விரட்டி நாமே ஆளலாம் என்ற சுதந்திர பேரிகை கொட்ட ஆரம்பித்தது. ஆனால் போருக்குப் பின்னால் இருந்ததும் போய், எதிர்பார்த்ததும் வராமல் ஏழ்மை நெருப்பில் விழுந்து புழுவாய்த் துடிக்கவேண்டிய நிலை வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. போருக்குப் பின் ஏற்பட்ட சமூக வாழ்வின் அதிர்ச்சி அவர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் இருபது ஆண்டுகளுக்குப் பின் பெறவேண்டிய அரசியல் அனுபவத்தைக் கால வேகம் அவர்களை முன்னுக்குத் தள்ளியிருக்கிறது. இது யாராலும் செய்யப்பட்டதல்ல. பல வல்லரசுகளின் பேராசைச் சுரண்டலும், இயற்கையுமே இதை மாற்றியிருக்கிறது. சட்டமே விரும்பியிருந்தாலும் இதை இவ்வளவு விரைவில் செய்திருக்க முடியாது. சட்டத்திற்குத் தனியாக ஒரு வல்லமையும் இல்லை. அதற்கு மக்கள் கொடுக்கும் மதிப்பு தான் சட்டம் ஒரு நாட்டில் ஊன்றி நிற்க நங்கூரமாகின்றது.

அந்தச் சட்டங்கள் மக்களுக்குப் பயன்படாதொழிந்தால், அல்லது என்றோ எழுதிய சட்டங்களுக்கு இன்றைய சமூகம் அடிமைப்பட முடியாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/34&oldid=1315774" இலிருந்து மீள்விக்கப்பட்டது