பக்கம்:வெங்கலச் சிலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

35


சூழ்நிலை ஏற்பட்டால், அல்லது சட்டங்கள் மக்கள் நலனைக் கவனியாது, தன் கண்ணியம், கௌரவம், அதிகாரம் ஆகியவைகளையே காப்பாற்றிக் கொள்ள எண்ணினால், அல்லது மக்களுக்காகச் சட்டம் என்றெண்ணாமல், சட்டத்திற்காக மக்கள் என்ற நிலையை நிலைநாட்ட எண்ணினால், ஒரு சில அறிஞர்கள் அவைகளை மாற்றியமைக்க எண்ணுகிறார்கள். அவர்கள் அரசியல் முத்திரை பெற்றவர்களாயிருந்தால் சட்ட நிபுணர்கள் என்கிறோம். இல்லாமல் வெளியே இருந்து சொல்லுபவர்களைப் புரட்சிக்காரர்கள் என்கிறோம். ஆனால், அது, பாராளுமன்றத்தின் உள்ளே செய்யப்பட்டாலும், வெளியே செய்யப்பட்டாலும் புரட்சியின் வாடை, புதுயுகத்தின் ஏற்பாடுதான். ஆனால் அதன் கொடுங்கோன்மைக்குப் பலியானவர்கள் எண்ணற்றோர் புரட்சிக்காரர்கள் என்ற குற்றத்தின் தாக்குதலால்.

புரட்சி என்பது எல்லா நாடுகளிலும் ஒரே குறிக்கோளோடு நடப்பதில்லை. அந்தந்த நாட்டுக்குத் தேவையான முறையில் புரட்சி நடந்தவண்ணமிருக்கும். ருஷ்யாவில் தொழில் புரட்சி, ஜப்பானில் கைத்தொழில் புரட்சி, பிரான்சில் விடுதலைப் புரட்சி, சீனாவில் கட்சிப் புரட்சி, இங்கிலாந்தில் அரசியல் புரட்சி, அமெரிக்காவில் அடிமைப் புரட்சி, கிரேக்கத்தில் அறிவுப் புரட்சி, இந்தியாவில் சமூகப் புரட்சி, இதாலி ஜெர்மனியில் மதப் புரட்சி, யுகோவிலும் ஜெகோவிலும் யந்திரப் புரட்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/35&oldid=1315775" இலிருந்து மீள்விக்கப்பட்டது