பக்கம்:வெங்கலச் சிலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

வெங்கலச்சிலை


வேறு நாட்டில் சமூகப்புரட்சி இல்லை என்பதற்காக நம் நாட்டில் அதைப்பற்றிப் பேசக் கூடாது என்பது அறிவுடைமையல்ல. எந்தெந்த நாட்டில் எவை எவை தேவையோ, அவைகளுக்காகப் போராடுவதுதான் அந்தந்த நாட்டு மக்களுடைய இயற்கைக் குணம். அதை விட்டு விட்டு, இந்த நாட்டில் அதுவுண்டா, அந்த நாட்டில் இது உண்டா என்பது நல்லதல்ல.

இந்த நாட்டைப் பொறுத்தவரை படித்தவன், வேலையில்லாத் திண்டாட்டத்தினால், தன் படிப்புக்குக் கீழான வேலையையும், தொழிலாளர்களுக்கு விரோதமாய், முதலாளிகளுக்கு நல்லவனாய் நடந்து தன் வாழ்க்கையை நடத்தவேண்டிய சூழ்நிலை என்ற சூறாவளியில் அகப்பட்டுக் கொள்ளுகின்றான். இந்த நிலையில் நமது நாட்டில் புரட்சி ஓங்குவதெங்கே? தொழிலாளிகள் வெற்றிபெறுவதெங்கே?

படித்தவர்களுக்கு வேலை தேடிக்கொடுக்காமலும், தொழிலாளர்களுக்குப் போதிய ஊதியம் தராமலும், படிக்க வசதியற்றவர்களுக்குக் கல்வி வசதியளிக்காமலும், அறிவுத் துறையில் மக்களை அழைத்துச் செல்லாமலும், இனத்தின் பேரால் மக்கள் அடைந்திருக்கும் இழிவைப் போக்காமலும், ஏழை பணக்காரனுக்கிடையில் வீழ்ந்திருக்கும் பிளவை ஒன்று சேர்த்து இணைக்காமலும், லஞ்சம் பதவி வேட்டை, சுயநலம், ஆகியவைகளையே குறிக்கோளாகக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/36&oldid=1315776" இலிருந்து மீள்விக்கப்பட்டது