பக்கம்:வெங்கலச் சிலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

37


அரசாங்கத்தினிடம் மக்கள் உள்ளன்போடு நடந்து கொள்ளமாட்டார்கள். அது இயற்கையுமல்ல, எந்த வசதியும் செய்துதராமலே மக்களைத் தன் சொல் வழி நடந்தே தீரவேண்டுமென்று வற்புறுத்துவது மருந்துண்ணாமல் நோய் நீங்கவேண்டுமென்று விரும்புவதற்கொப்பாகும்.

"அரசாங்க உரிமைகளைவிட மக்கள் உரிமைகள் மேலானவை அரசாங்கம் தனக்கிருக்கும் சட்ட உரிமையை ஒரு குற்றவாளியின் மேல் சுமத்தப் பார்க்கின்றதே தவிர, அந்த மனிதன் ஏன் குற்றம் செய்தான் என்ற அடிப்படையை எண்ணிப்பார்ப்பதில்லை. அவன் குற்றம் செய்வதற்குள்ள காரணங்களைச் சமூகப் பொருளாதார வாழ்விலிருந்து அடியோடு களைந்தெறிந்தால் பிறகு யார் குற்றவாளிகள்?

"இயற்கையில் மனிதன் நல்லவன்" என்ற அறிஞர்களின் வாய்மைக்கு எல்லா மக்களும் இலக்கானால், நீதி மன்றம், சிறை, அதிகாரிகள் காவல் ஆகிய அவ்வளவுக்கும் தேவையிருக்காது. அந்த நாளின் தோற்றம் அண்மையிலோ, சேய்மையிலோ அல்லது இல்லவே இல்லையோ, யார் கண்டார்கள். ஒருவனுடைய மன பேதத்தோடு மன்பதை எவ்வளவோ துன்பப்பட்டிருக்கிறது நினைக்கவே நெஞ்சம் கொதிக்கிறது.

ராஜகிரிக்கும் ராஜகோட்டைக்கும் தலைநகரை மாற்றவேண்டுமென்று நினைத்த மகம்மத் இபின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெங்கலச்_சிலை.pdf/37&oldid=1315777" இலிருந்து மீள்விக்கப்பட்டது