பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 இப்பொழுது பயணம் போகிறீரே! எனக்காக உமது உயிரைக் கொடுக்கப் போகிறீரா? 0 நூல் : இலங்கைத் தீவு (1959) , பக்கம்87, 88, 89, நூலாசிரியர் : ஜே. விஜய துங்கா, தமிழாக்கம் : கே. வி. ராமச் சந்திரன். குந்திதேவி குந்தி, போஜன் எடுத்து வளர்த்த அபிமான புத்திரி. தேவ மீடனுக்கு மாரிஷையிடத்துப் பிறந்த புத்திரி வசு தேவன் தங்கை. இவளுக்குப் பிருதையென்றும் பெயர். இவள் தந்தை அநுமதிப்படி துர்வாச விருவியிடத்து ஏவல் செய்துகொண்டிருந்தாள். அவளுடைய ஏவற் பத்தியைப் பன்முறையுங்கண்டு மகிழ்ந்த இருவி, ஒரு திவ்ய மந்திரத்தை யுபதேசித்து இதனை நீ யாரைநோக் கிச் செபித்தாலும் அவர்கள் பிரசன்னமாகிப் புத்திரோற் பத்தி செய்வார்களென்று கூறி விடையளித்தனர். இதனைக் குந்திதேவி பரீகதிக்க நினைத்துக் கங்கையாடி அக்கங்கைக் கரையிலே நின்று சூரியனை நோக்கி அம் மந்திரத்தைச் செபித்தாள், உடனே சூரியன் பிரசன்ன மாகிக் கன்னிகா பங்கமின்றி ஒரு புத்திரனைப் பெறுக வென்று கூறி மீண்டான். அவ்வாறே குந்தி சகஜ கர்ன குண்டலங்களோடு கூடிய கர்ணனைப் பெற்றாள். வசு சேனன் என்பதும் கர்னனுக்கொரு நாமதேயம். இதன் பின்னர்ப் பாண்டு ராசாவுக்குப் பாரியாகித் தருமன் முதலிய ஐவரையும் பெற்றாள். இவள் சித்தி வமிசம். 0 நூல் : அபிதான கோசம் (1902) நூலாசி ரியர் : ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை.