பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.3 ளென்று அயலார் அவ்வூரசனுக்கறிவுறுத்தினார்கள். அரசன் சுலோசனனை அழைத்து உன் புத்திரியை இந் நகரத்துக்கு வெளியே அனுப்பி வைக்கக் கடவையென்று அவனுக்கு ஆஞ்ஞை செய்தான். அவ்வாறே அவள் அந் நகரத்துக்குப் புறத்தேயுள்ளதாகிய ஒரு குலாலசேரியை அடைந்து ஒரு குலாலன் வீட்டில் அடைக்கலம் புகுந்து வசிப்பாளாயினாள். உரிய காலத்திலே புத்திரனும் பிறந் தான். அவனுக்குச் சாலிவாகனன் என நாமகரணஞ் செய்து வளர்க்கலாயினர். e நூல்: அபிதானகோசம்(1902),பக்கம்-130, 131 நூலாசிரியர் : முத்துத்தம்பிப் பிள்ளை தாரை மகாபதிவிரதைகளுள் மற்றொருத்தி தாரை, இவள் தேவகுரு பிரகஸ்பதியின் மனைவி. இவள் தன் கணவன் ஊரில் இல்லாத சமயத்தில், தன் கணவரிடம் படிக்க வந்திருந்த சந்திரன் என்னும் மாணவனை மோகித்து அவனுடன் கலவி செய்து நீண்ட நாள் வரை அவனுக்கு ஆசை நாயகியாயிருந்து புதன் என்ற குழந்தையைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பிரகஸ்பதியின் மனைவி யானாள். - 0 நூல் : சுந்தரமூர்த்தி நாயனார் வினோத கிரிமினல் கேஸ் (1948) பக்கம்-18 நூலா சிரியர் : சித்த வைத்திய அ. சி. சுப்பையா சிங்கப்பூர். திரெளபதி திரெளபதி மகா பதிவிரதைகளில் ஒருத்தி. இவ ளுக்கு ஐந்து கணவர்கள். இவர்கள் போதாதென்று ஆறாவதாகக் கர்ணன் என்பவனையும் மோகித்தாள்.