பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 04 e நூல் : சுந்தர மூர்த்தி நாயனார் வினோத கிரிமினல் கேஸ் (1948) பக்கம் 18. நாலா சிரியர் : சித்த வைத்திய அ. சி. சுப்பையா சிங்கப்பூர். பவுஸ்டினா மார்க்கஸ் அரேலியஸ் கி. பி. 121-ம் வருஷம் ஏப்ரல் மாதம் இருபத்தாறாந்தேதி ரோமாபுரியில் பிறந்தான். இவனுடைய பெற்றோர்கள் உயர் குடும்பத்தைச் சேர்ந் தவர்கள். இவனது தாயார், அப்பொழுது சக்ரவர்த்தி யாக ஆண்டு கொண்டிருந்த அண்ட்டோனினஸ் பையஸ் என்பவனுடைய சகோதரி. அண்ட்டோனினஸ் பையஸ் க்குப் பின்னர் பட்டத். திற்கு வந்த மார்க்கஸ் அரேலியஸ், அவனுடைய சகோ தரி மகனும் மருமகப்பிள்ளையுமாவான். எகிப்தில் கிளம்பிய எதிர்ப்பை அடக்க காஷியஸ் என்ற ஒருவன் அனுப்பப் பட்டிருந்தான். இவன் திறமை வாய்ந்த சேனாதிபதி என்று பெயர் படைத்திருந்தான். இவனுடைய திறமையில் மார்க்கஸுக்கு அதிக நம்பிக்கை யிருந்தது. - காஷியஸ் கொலையுண்டது மார்க்கஸ்-க்குத் தெரிந்தது. பின்னர், கலகம் நடைபெற்ற பிரதேசங் களைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று புறப்பட்டான் மார்க்கஸ், கூடவே இவன் மனைவி பவுஸ்டினாவும் சென்றாள். இவனுக்கு ஒரு மகனுண்டு. அவன் பெயர் கம்மோடஸ். அப்பொழுது அவனுக்கு ஏறக்குறைய பதினான்கு வயதாயிருந்தது. அவனையும் அழைத்துச் சென்றான். மார்க்கஸ். மேற்படி பிரதேசங்களைச்சுற்றிப்