பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I Q 5 பார்த்துக் கொண்டு வருகையில் பவுஸ்டினா திடீரென்று நோய்வாய்ப் பட்டு இறந்து விட்டாள். பவுஸ்டினா துர்நடத்தையுள்ளவளென்று சொல்லி பலவிதமான அவதூறுகள் மார்க்கஸின் காதில் விழுந்தன. ஆனால் இவன் இவைகளை நம்பவில்லை; அல்லது பொருட்படுத்தவில்லை. எப்பொழுதும் போல் அவளை விசுவாசத்துடனேயே நடத்தி வந்தான். அவள் இறந்த பிறகு அவளுக்கு வெள்ளியினால் உருவச்சிலைகள் சமைத்து அமைக்க ஏற்பாடுகள் செய்தான். - e நூல்: சமுதாய சிற்பிகள் (1952), பக்கம்78, 79, நூலாசிரியர் : வெ. சாமிநாத சர்மா. புலோமசை ஒரு வனத்தில் பிருகு முனியானவர் தம் மனைவி புலோமசையோடு வாழ்ந்திருக்குங்கால், ஒருநாள் அஸ்த மனத்தில் சந்தியானுஷ்டானத்துக்குப் போகிற போது பூர்ண கர்ப்பமாயிருக்கிற தம் பெண்சாதியைப் பார்த்து தான் திரும்பி வருகிற வரையில் இந்த ஒம குண்டத்தை நடத்திக்கொண்டிருவென்று கற்பித்தார். அப்படியே அவள் நடத்திக்கொண்டு வருகையில் அக்கிணிதேவன் பிரசன்னமாகி அவள் கொடுக்கும் ஆகுதியை ஒப்புக் கொண்டு அக்குண்டத்தின் மத்தியிலிருந்தான். அந்த வேளையில் ஒரு இராட்சதன் அந்த வெளிச்சத்தைக் கண்டு அவிடமணுகி, ஒமஞ் செய்கிற முனி பத்தினியைப் பார்த்து தான் துராத்மாவாகையால், கெடுநினைவை மனதிற்கொண்டு அக்கினி தேவனை நோக்கி, இவள் யாரென்று வினவ, பிருகு முனிவருடைய பத்தினியென்று சொன்னான். நீசொன்னது சரியல்ல, சிறுவயதிலே நான் இவளை விவாகஞ்செய்தேன். அவள் என்னை (് ഖ-7