பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.6 மோசஞ்செய்து ஒடிப்போய் விட்டாள். இவளை இப் போது கண்டு பிடித்தேன், இனி நான் விடுவதில்லை யென்று இராக்கதன் அவளைத்துக்கித் தோள்மேற் கொண்டு போகும்போது, அவள் பயந்து கூச்சலிட்டதின் பேரில், பூரண கர்ப்பிணியாகையால் அவன் தோள் மீதே ஒரு புத்திரனைப் பெற்றாள். 0 நூல்: மகாபாரத சங்கிரகம் ஆதிபர்வம் (1870), பக்கம்-4. நூலாசிரியர்: தரங்கை மாநகரம் ந. வ. சுப்பராயலு நாயகர். மாக்கஸ் ஒளறிலியன் மனைவி (ரோம்) மாக்கஸ் ஒளறிலியன் என்னும் தனிக்கோலனைப் பலர் ஞானிவேடம் பூண்டு ஏமாற்றிச் சமயக்கோட்பாடு களைப் பற்றிப் பேசி முகமன் கூறிப் பொருளும் பதவியும் பெற்றுத் தம் வாழ்நாளைப் போக்கினர். மாக்கஸ் தத்துவ ஞானியாயிருந்தும் பலரால் ஏமாற்றப்பட்டான். அவன் தன் மனைவி மகன் தம்பி, முதலிய சுற்றத்தாரின் ஒழுக்கத்தைக் கண்டிக்கவில்லை. மாக்கஸ் தத்துவஞானி யாதலின் ஆடம்பர வாழ்க்கையை வெறுத்தான். அவன் மனைவியோ ஜம்புலவின் பங்களை வெறுத்தாளல்லள். உருநலன் வாய்ந்தோர் இழிகுலத்தோராயினும் காமுறு வள். ஒளறிலியன் தன் மனைவி எத்தகையளென வுண ராது அவளை நனி புகழ்ந்தான். தன் மனைவியே இல்லக் கிழத்திகளிற் சிறந்தவளென நம்பினன். இப்பெருமனைக் கிழத்தியை அளித்த கடவுளை யென்றும் நினைந்து துதித்தான். அவள் இறந்தவுடன் அவன் துன்பக்கடலில் மூழ்கினான். மேன்மக்கட்சபை உடன்ே அவளுக்குக் கோயில் அமைத்து வழிபாடு ஏற்படுத்தியது. - e @ggi: , Q&#3189 (MAY-JUNE 1940), தொகுதி-37 பகுதி-7 பக்கம்-313, 314,