பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 2 காரைக்கால் கடிதங்கள் மரியதாசு லஞ்ச கேஸ் (1890) காரைக்கால் டெளன் போலீசு கொத்தவாலாகிய மெத்தவாலான "மரியதாசுதிரு' என்பவர் அலமேலிடம் திருட்டுப் புடவை வாங்கிய குற்றத்திற்காக 5 ரூ லஞ்சம் வாங்கினார். நாடார்களின் சண்டையில் 6 ரூ பெறும் படியான கருப்பிட்டி வெல்லம் லஞ்சம் வாங்கினார். ஒரு பெண்பிள்ளைசண்டையில் 10ரூ லஞ்சம்வாங்கினார். இந்த மூன்று குற்றங்கள் ருசுவாகியதால் இவர் காவற் கூடத்தில் வைக்கப்பட்டு வேலையிலிருந்து நீக்கப் பட்டிருந்தார். பிறகு சூன் மீ 10தேதிசெஷன் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டபொழுது குற்றவாளியென்று கண்டு பிடிக்கப்பட்டு 6 மாதம்கடுங்காவலும் 200பிறான்.அவுதார மும் 50 பிறான் மானநஷ்டமுங் கொடுக்கும்படி புதுவை கனந்தங்கிய "நீதியதிபர் ஜூரிகளின் மூலியமாய்த் தீர்ப்பளித்தனர். புதுவை '’அவுக் காஜெனரல்' துரைய வர்கள் இவனுடைய லஞ்ச நடத்தைக்காக மிக கர்ண கடுரமாய்த் தண்டிக்கும்படி மிக வாதித்துப் பேசினார். எதிரியின் லாயர்ப் புலிகளாகிய பையூ துரையும்’ *ரொசாரியாமகனும் வெகு நேரம் வாதாடி 'நீதியதிபர் ’ கேட்ட கேள்விகளுக்கு தக்க மறுமொழி. சொல்ல ஏலாமல் பெட்டிக்குள் பாம்பு அடங்கிக்கொள்வது போலடங்கி விட்டனர்கள். மேற்படி குற்றவாளி இன்னமனேகரிடம் லஞ்சம் வாங்கி யிருக்கிறார். அவைகளியாவும் வெளிவர வில்லை. எண்ணெய்க் கடை மாணிக்க செட்டியார் கூட 30 ரூ லஞ்சம் கொடுத்திருக்கின்றனர். தாசி மீனாகதி யிடம் கூட 25 ரூ லஞ்சம் பெற்றிருக்கின்றார். இவர் அநேகரிடம் 2000 ரூக்கு மேற்பட்டு லஞ்சம் வாங்கியிருக் கிறார். அதையெல்லாம் எடுத்தெழுத சாவுகாசமில்லாத தால் நிறுத்திவிட்டனம். - - - - - கைலாச நாதர் 0 இதழ்: பூர் லோக ரஞ்சனி (1890)