பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 13 ரஷ்ய அதிகாரி என். எஸ். எஸ்ரமோவ் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொல்லத் தீர்ப்பானது. என்.எஸ். எஸ்ரமோவ் என்ற இவர், கார்க் என்னும் இடத்தில் உள்ள சப்ளை டிப்போவின் பிரதம அதிகாரி யாக இருந்தார். இவர் அதிக சம்பளத்துக்கு லாரி டிரைவர்களை வேலைக்குவைத்ததாகவும், அவர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாகவும் குற்றஞ்சாட்டப் பட்டது. மொத்தம் 32 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இவர் லஞ்சம் வாங்கினாராம், இவரைச் சுட்டுக் கொல்லும்படி தீர்ப்புக் கூறப்பட்டது. 0 இதழ்: நவமணி, 22-2-1963. ராணா விலங்கன் ராணாலங்கன்-பெற்ற தகப்பனைக் கொன்றவனு டையபெயரையும் சொல்லவேண்டுமோ! தனது பந்துக் களால் தள்ளப்பட்டு, நாட்டாராலும் வெறுக்கப் பட்ட இவன், தனக்கு வேண்டியவர்களுக்குத் தன் கீழுள்ள சிற்றரசர்களுடைய நாடுகளையும் ஜாகீர்தார் களுடைய நிலங்களையும் பிடுங்கிக் கொடுப்பதும், அயல் நாட்டரசர்களின் துணையை லஞ்சங்கொடுத்துத் தேடுவது மாயிருந்தான். தன்னை ஒப்புக்கொண்டால் டில்லியரசனுக்குத் தனது மகளையே விவாகம் செய்து கொடுக்கத் தான் தயாராயிருப்பதாகச் சொல்லி பயனுப்பினான். தேசாபிமானமும் மதாபிமானமும் சன் மார்க்கமுமே உருவெடுத்து வந்தாற் போலிருந்த சித்துளர் ராணாக்களின் குடியைக் கெடுக்க வந்த இக் கோடரிக் காம்பின் தலையில் ஒரு இடிவிழக்கூடாதா என்று யார் சாபமிட்டனரோ, டில்லியரசனது தர்பாரிலிருந்து வெளி