பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 3 டார்களென்றும் எண்ணினான். எப்படியாவது தான் அவ்வைரத்தை அடைய வேண்டுமென்று, சாம தான பேத தண்டம் முதலிய நால்வகை வழிகளையும் உபயோ கிக்கத் துணிந்தான். ஆதலால் மறுபடியும் தன் பணி யாளனை ஷாஷாஜாவினிடம் அனுப்பி அவன் சொல்லி யனுப்பிய வார்த்தைகள் உண்மையல்லவென்று தனக்குத் தெரியுமென்றும், அவ் வைரத்தைத் தன்னிடம் சீக்கிரம் ஒப்புவிக்காவிட்டால் அதனால் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கு முண்டாகும் தீங்கைத் தான் முன்னா லேயே எச்சரிப்பதாகவும் பயமுறுத்தினான். ஆனால் ஷாஷூஜாவோ ரஞ்சித்சிங்கன் பன்முறை ஆளையனுப்பினாலும் முன் சொன்ன வார்த்தை களையே திரும்பித் திரும்பிப் பகர்ந்தான். கடைசியில் ரஞ்சித் சிங்கன் வெகுளி மேற்கொண்டு, ஷாவின் வீட்டைச் சுற்றிக் காவல் வைத்து எவரும் உள்ளிருந்து வெளியிற் செல்லவாவது, வெளியிலிருந்து உட் செல்ல வாவது முடியாமற் செய்தான்; உணவு கூட சரியாக அனுப்புவதில்லை. தன் நண்பர்களும் வேலையாட்களும் பெண்சாதி பிள்ளைகளும் பசியால் வாடிக் கஷ்டப் படு வதைப் பார்த்து மனஞ்சகியாமல் ஷாஷஅஜா ரஞ்சித் சிங்கனுக்கு அவ் வைரத்தை யளிப்பதாக சொல்லி யனுப்பினான். மறு நாள் அதிகாலையே ரஞ்சித் சிங்கன் மிக்க ஆவ லுடன் ஷாவின் மாளிகைக்குப் போந்தான். ஷாவை: சவைரம் எங்கே? சீக்கிரம் கொண்டுவரச் சொல்' σ76ύτε, அவன் ஒரு வேலைக்காரனைக் கோஹினூர் வைரத்தைக் கொண்டு வரக் கட்டளையிட்டான். அவன் அவ்வாறே சென்று ஒருசிறிய வெல்வெட் துணி முடிச்சைக் கொண்டு வந்து ஷாவினிடம் கொடுத்தான். ஷா அதை ரஞ்சித் சிங்கனிடம் கொடுத்தான். ரஞ்சித் சிங்கன் அதை வாங்கி,