பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 டில்லியில் ஆண்ட மொகலாய அரசன் மகம்மதுஷாவிட மிருந்து பிடுங்கிக் கொண்டான். சில வருடங்களுக்குப் பிறகு நாதர்ஷா இறந்த பொழுது அவன் பின் வந் தோனான ஆமத்வடிா அப்தாலி அவ்வைரத்தை வைத்தி ருந்தான். பிறகு அவ்வைரம் அவனது சந்ததியாரிடமே மாறி மாறி இருந்தது. கடைசியில் அது ஆப்கானிஸ்தா னத்தை யாண்ட ஷாஷஅஜாவிட மிருந்தது. சிறிது காலங்கழித்த பிறகு ஷாஷஅஜாவை டோஸ்டு முகம்மது என்பவன் ஆப்கானிஸ்தானத்திலிருந்து துரத்தித் தான் சிங்காதன மேறினான். அப்பொழுது ஷாஷஅஜ பஞ்சாப் வந்தடைந்தான். அக்காலை ரஞ்சித் சிங்கன் மிக்க உபசா ரத்துடன் அவனையும் அவன் குடும்பத்தையும் வரவேற் றான். ஒரு பெரிய மாளிகையை அவர்கள் வசிக்க ஏற் பாடு செய்தான். ரஞ்சித் சிங்கன் ஷாவிற்கு தன் நாட்டில் இடங்கொடுத்ததற்கு முக்கிய காரணம். அவனி டமிருந்த கோஹினூர் வைரத்தை அபகரிக்க வேண்டியே யொழிய வேறில்லை. ஷாஷூஜா. பஞ்சாப் வந்தடைந்து கொஞ்ச நாட் களான பிறகு, ரஞ்சித் சிங்கன் ஒரு நாள் ஒரு வேலை யாளை ஷாவினிடம் அனுப்பி அவன் வைத்திருக்கும் வைரத்தைக் கொடுத்தனுப்பச் சொன்னான். வடிாஷூஜா அவ்வைரத்தினருமை தெரித்தவனாதலால், அவன் 'அவ்வைரம் தற்சமயம் என்னிடம் இல்லை. யான் ஆப்கானிஸ்தானத்தை விட்டு இங்கு வருகையில் எனது உயிர்ச் சினேகனான ஒரு வியாபாரியிடம் கொடுத்துப் பதனப்படுத்தி வந்தேன். ஆகையால் தங்க ளுடைய வேண்டுகோள்படி செய்ய முடியாமை பற்றி மிகவும் விசனிக்கின்றேன்' என்று சொல்லியனுப் பினான். ஆனால் ரஞ்சித் சிங்கனோ ஷாஷ'அஜாவின் வார்த்தைகளை முழுப்பொய்யென்றும் அவ்வளவு பெயர் பெற்ற வைரத்தை எவரும் பிறரிடம் கொடுக்க மாட்